iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/வாண்டெர்வால்சு_ஆரம்
வாண்டெர்வால்சு ஆரம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வாண்டெர்வால்சு ஆரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாண்டெர் வால்சு ஆரங்கள்
தனிமம் ஆரம் (Å)
ஐதரசன் 1.2 (1.09)[1]
கரிமம் 1.7
நைதரசன் 1.55
ஆக்சிசன் 1.52
புளோரின் 1.47
பாசுபரசு 1.8
கந்தகம் 1.8
குளோரின் 1.75
செப்பு 1.4
Van der Waals radii taken from
Bondi's compilation (1964).[2]
Values from other sources may
differ significantly (see text)

ஓர் அணுவின் வாண்டெர்வால்சு ஆரம், rw, என்பது ஓர் அணுவைச் சுற்றி அவ்வணு கெட்டியான உருண்டை போல் இருந்தால் அதன் ஆரம் என்னவாக இருக்கும் என்பதைக் குறிக்கும் நீளம். இன்னொரு அணு ஓர் அணுவை அணுகும்பொழுது எவ்வளவு தொலைவில் அதன் இருப்பை உணரும் என்பதையும் பொறுத்து கற்பனையாக அந்த அணுவின் ஆரம் கருதப்பெறுகின்றது. வாண்டெர்வால்சு என்பது 1910 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசை வென்ற யோகான்னசு வாண்-டெர்-வால்சு என்பவர் பெயரால் குறிக்கப்பெறுகின்றது. அவர்தான் அணுக்களை வெறும் புள்ளிகளாகக் கருதமுடியாது என்றும் அவற்றின் பருவளவு விளைவுகள் தரவல்லது என தன் வாண்டெர்வால்சு நிலையிருப்புச் சமன்பாட்டின்வழி (van der Waals equation of state) காட்டினார்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Rowland RS, Taylor R (1996). "Intermolecular nonbonded contact distances in organic crystal structures: comparison with distances expected from van der Waals radii". J. Phys. Chem. 100 (18): 7384–7391. doi:10.1021/jp953141. 
  2. Bondi, A. (1964). "Van der Waals Volumes and Radii". J. Phys. Chem. 68 (3): 441–51. doi:10.1021/j100785a001. http://pubs.acs.org/doi/pdf/10.1021/j100785a001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாண்டெர்வால்சு_ஆரம்&oldid=2747781" இலிருந்து மீள்விக்கப்பட்டது