iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/வளர்ப்பினம்
வளர்ப்பினம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வளர்ப்பினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்ப்பினம் (breed) என்பது குறிப்பிட்ட உயிரினத்தில் இருந்து பிரித்தறிய முடிந்த, ஒத்த தோற்றமும் ஒத்த நடத்தையும் பான்மைகளும் வீட்டு விலங்கினத் தனிக்குழுவாகும். அறிவியல் மரபு இலக்கியத்தில் இதை விட சற்றே விலகிய வரையறைகளும் உண்டு.[1][2] வளர்ப்பினங்கள் மரபியல் தனிமைப்படுவதாலோ இயற்கைத் தகவமைப்பாலோ அல்லது இந்த இருவகை நிகழ்வுகளாலோ உருவாகலாம். வளர்ப்பினங்கள் வேளாண்மையோடும் கால்நடை வளர்ப்போடும் தொடர்பு கொண்டுள்ளமை தவிர, அறிவியல் முறைப்படியான தனி வரையறையேதும் ஏற்கப்படவில்லை.[3][page # needed]}} வளர்ப்பினத்துக்கான வரையறைகள் எண்ணிறந்தவை என்பதை கணக் கோட்பாட்டு வழிமுறயால் காட்டலாம். இந்த ஒவ்வொரு வரையறையும் வளர்ப்பினப் பொதுத் தேவைகளைச் சந்திக்க வல்லதாக அமைதலை பார்க்கலாம்.[2] எனவே வளர்ப்பினம் என்பது புறநிலையில் நிறுவமுடிந்த உயிரியல் வகைபாடல்ல. ஆனால், இது விலங்கு வளர்ப்பவர்கள் தம் கலை சார்ந்து உருவாக்கிய பொதுவிணக்கம் வாய்ந்த குறிப்பிட்ட உயிரினத்தில் இருந்து தேர்ந்தெடுத்த உட்கணமாக விளங்கும் வளர்ப்பினத்தின் பண்பமைதியைக் குறிக்கும் கலைச்சொல் ஆகும்.[4][page # needed]வளர்ப்பினம் அளவையியலாக நிறுவ வல்ல வகைமைக் கூறுகள் பொருந்தி இருப்பதோடு அவை தமக்குள் கலவி செய்கையில் அதே வகை வழித்தோன்றலை உருவாக்கும் தகைமையும் பெற்றுள்ளது.[5] வளர்ப்பினங்கள் தமக்குள் இனப்பெருக்கம் செய்யும்போது முன்கணிக்கும் அதே பண்புக் கூறுகளைத் தம் வழித்தோன்றல்களுக்கும் வழங்குகின்றன. இத்தகுதி வளர்ப்பினத்துக்கு அமையவேண்டிய உண்மைத் தகவாகும். தாவர வளர்ப்பினங்கள் பயிரிடுவகைகள் (cultivars) எனப்படுகின்றன. வேறுபட்ட வளர்ப்பினங்களுக்கு இடையே நிகழும் இனப்பெருக்கத்தால் உருவாகும் புது வளர்ப்பினம் கலவை வளர்ப்பினம் எனப்படுகிறது. சிறப்பினங்களுக்கு இடையிலோ அல்லது அவற்றின் சிற்றினங்களுக்கு இடையிலோ பேரினங்களுக்கு இடையிலோ உருவாகும் தாவர அல்லது விலங்குக் கலப்புகள் பொதுவாகக் கலப்பினங்கள் எனப்படுகின்றன.[6]

இனவளர்ப்பு: வளர்ப்போர் தேர்ந்தெடுத்தல்

[தொகு]
dark gray, hairy Vietnamese Pot Bellied Pig
dark pink with thin black hair Meishan pig
Fine white haired, pink-skinned Sus scrofa
இந்த எடுத்துகாட்டு தோற்றத்தில் வேறுபடும் மூவகை வீட்டுப் பன்றி வளர்ப்பினங்களைக் காட்டுகிறது.

தனி வளர்ப்போன் அல்லது வளர்ப்போர் குழு ஒருவளர்ப்பினத்தை உருவாக்கிட, பொது மரபன் தேக்கத்தில் இருந்து தேவைப்படும் பண்புக் கூறுகளைக் கொண்ட தனியன்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கத்துக்கு ஆட்படுத்துவர். இவ்வகை இனப்பெருக்கம் தெரிந்தெடுத்த அல்லது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எனப்படும். இதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தனியன்கள் அடிப்படை உறுப்படிகள் எனப்படும். பிறகு இவ்வகை வளர்ப்பினமே மீண்டும் மிகவும் தேவைப்படும் பான்மைகள் அமைந்த புதிய வளர்ப்பினத் தனியன்களுடன் உறவுகொள்ள விடப்படும். இந்தத் தொடர் செயல்முறையே தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எனப்படுகிறது ஒரு வளர்ப்பினத்துக்குத் தேவையான, தேவையற்ற பான்மைகளைப் பற்றிய எழுத்துவகை விவரிப்பு வளர்ப்பி னச் செந்தரம் எனப்படும் .

வளர்ப்பினப் பான்மைகள்

[தொகு]

வளர்ப்பினத்தின் தனித்த சிறப்பியல்புகள் வளர்ப்பினப் பான்மைகள் எனப்படுகின்றன. இவை மரபுபேறாக தம் வழித்தோன்றல்களுக்கு கையளிக்கப்படுகின்றன. தூய வளர்ப்பினங்கள் இப்பான்மைகளை ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து கையளிக்கின்றன. எனவே ஒவ்வொரு தலைமுறை சார்ந்த வளர்ப்பின வழித்தோன்ற்லகளும் அடிப்படை வளர்ப்பினத்தின் (முதல் தலைமுறை வளர்ப்பினத்தின் பான்மைகளைப் பெற்றமைகின்றன. வளர்ப்பினப் பான்மைகளைப் பேண, வளர்ப்போர் அவற்ருக்குள்ளேயே மிகவும் நெருக்கமான வகைமைப் பான்மைகள் உள்ள தனியன்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கத்துக்கு ஆட்படுத்துவர்

வீட்டு விலங்கு வளர்ப்பினங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒரு குறிபிட்ட நாட்டு வளர்ப்பினம் அந்நாட்டின் பிறப்பிட வளர்ப்பினங்கள் எனப்படும்.

வளர்ப்பினங்களின் பட்டியல்கள்

[தொகு]

பாலூட்டிகள்

[தொகு]
  • வீட்டுப் பூனைப் பட்டியல்
  • வீட்டுப் பசுப் பட்டியல்
  • நாய் வளர்ப்பினப் பட்டியல்
  • காவல்நாய் பட்டியல்
  • நீர் எருமைப் பட்டியல்
  • வீட்டுப் பன்றிப் பட்டியல்
  • கழுதை வளர்ப்பினப் பட்டியல்
  • ஆடு வளர்ப்பினப் பட்டியல்
  • கினியப் பன்றி வளர்ப்பினப் பட்டியல்
  • குதிரை வளர்ப்பினப் பட்டியல்
  • முயல் வளர்ப்பினப் பட்டியல்
  • வளர்ப்பெலி வகைகள் பட்டியல்
  • ஆய்வக எலிப் பட்டியல்
  • செம்மறி வளர்ப்பினப் பட்டியல்

ஆப்பிசு மெலிஃபெரா

[தொகு]
  • அப்பிசு மெலிஃபெரா சிற்றினப் பட்டியல்

பறவைகள்

[தொகு]
  • கோழி வளர்ப்பினங்கள் பட்டியல்
  • வாத்து வளர்ப்பினங்கள் பட்டியல்
  • புறா வளர்ப்பினங்கள் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. S. J. G. Hall, D. G. Bradley (1995), "Conserving livestock breed biodiversity", TREE, vol. 10, p. 267-270
  2. 2.0 2.1 G. Langer (2018), "Possible mathematical definitions of the biological term "breed"", Archives Animal Breeding, vol. 61, p. 229–243, எண்ணிம ஆவணச் சுட்டி:10.5194/aab-61-229-2018
  3. The state of the world's animal genetic resources for food and agriculture. Barbara Rischkowsky and Dafydd Pilling. Commission on Genetic Resources for Food and Agriculture. 2007
  4. The Genetics of Populations. Jay L Lush. Iowa State University Press. 1994
  5. Clutton-Brock, Juliet. 1987 A Natural History of Domesticated Mammals, Cambridge University Press and the Museum of Natural History, page 40.
  6. Banga, Surinder S. (November 25, 1998). Hybrid Cultivar Development, p. 119. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-63523-8

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்ப்பினம்&oldid=3719613" இலிருந்து மீள்விக்கப்பட்டது