iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/பைண்டிங்_நீமோ
பைண்டிங் நீமோ - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பைண்டிங் நீமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபைண்டிங் நீமோ
இயக்கம்ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன்
லீ உன்க்ரிச் (இணை-இயக்குனர்)
தயாரிப்புகிரஹாம் வால்டர்ஸ்
கதைஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன்
போப் பீட்டர்சன்
டேவிட் ரினோல்ட்ஸ்
இசைதோமஸ் நியூமேன்
நடிப்புஅலெக்ஸாண்டர் கௌல்ட்
அல்பேர்ட் புரூக்ஸ்
எலென் டிஜெனியர்ஸ்
வில்லியம் டாபோ
பிராட் காரெட்
அலிசன் ஜானி
ஆஸ்டின் பெண்டில்டொன்
ஸ்டீபன் ரூட்
விக்கி லூவிஸ்
ஜோ ரான்ப்ட்
நிகோலஸ் பெர்ட்
ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன்
போப் பீட்டர்சன்
எரிக் பானா
ப்ரூஸ் பென்ஸ்
எலிசபெத் பெர்க்கின்ஸ்
ஒளிப்பதிவுசாரோன் கலஹன்
ஜெரமி லாஸ்கி
படத்தொகுப்புடேவிட் ஜயான் சால்டர்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
வெளியீடுமே 30, 2003
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$94 மில்லியன் (672.3 கோடி)
மொத்த வருவாய்Domestic: $339,714,978
உலகளவில்: ஐஅ$864.63 மில்லியன் (6,183.5 கோடி)
முன்னர்மோன்ஸ்டர்ஸ் இன்க்
பின்னர்த இன்கிரடபில்ஸ்
விருதுகள்1 ஆஸ்கார் (சிறந்த , 3 பரிந்துரைப்பு

ஃபைண்டிங் நீமோ (Finding Nemo) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகை

[தொகு]

இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பசிபிக் கடலில் வாழும் மார்லின் என்ற மீன் தனது மனைவியை இழந்த பின்னர், தனது ஒரே மகனான நீமோவை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கின்றது. தந்தை மீனின் சொற்களைப் பொருட்படுத்தாத நீமோ, தான் வாழும் பகுதியில் இருந்து பல தூரம் கடந்து செல்லும் பொழுது மனிதர்களால் பிடிக்கப்படுகிறது. இதைக் கண்ட மார்லின் தனது மகனை மீட்க அந்த படகினை துரத்திச் செல்கிறது.

நீமோ, சிட்னி துறைமுகம் அருகே ஒரு பல் வைத்தியரின் மீன் தொட்டியில் அடைக்கப்படுகின்றது. அங்கு வாழும் பிற மீன்களுடன் நட்புக் கொள்கிறது. இதற்கிடையே, நீமோவைத் தேடிச் செல்லும் மார்லினுக்கு, செல்லும் வழியில் பலரும் உதவி செய்கின்றனர். டோரி என்னும் மீனுடன் சிநேகிதம் கொள்ளும் மார்லின் தனது மகனைத் தேடி சிட்னி வரை செல்கின்றது.

தனது தந்தை தன்னை மீட்க சிட்னி வருவதை அறியும் நீமோவும், மீன் தொட்டியிலிருந்து தப்பிக்க முற்படுகிறது. நீமோவால் தப்பிக்க முடிந்ததா, தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை.

விருதுகள்

[தொகு]

இத்திரைப்படம் 2003-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்கமூட்டிய திரைப்படம்' ('Best Animated Feature Film') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது.[1] இது தவிர 32 வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.[2]

துணுக்குகள்

[தொகு]
  • ஜனவரி 2005 வரையில், 22 மில்லியன் டி.வி.டிக்கள் (DVD) விற்று, உலகிலேயே மிகவும் விற்பனையான டி.வி.டி என்ற பெருமை இப்படத்தையே சாரும்.[3]

ஆதாரங்கள்

[தொகு]
  1. Oscars.org official website
  2. IMDB.com Awards
  3. IMDB.com Trivia

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைண்டிங்_நீமோ&oldid=2956283" இலிருந்து மீள்விக்கப்பட்டது