புண்
காயம் | |
---|---|
உடலின் காயங்கள் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நெருக்கடி மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | T14.0-T14.1 |
ஐ.சி.டி.-9 | 872-893 |
ம.பா.த | D014947 |
காயம் (wound) என்பது அடிபடுதலின் ஒரு வகையாகும், இது தோல்கிழிந்து அல்லது வெட்டப்பட்டு அல்லது பொத்தல் உருவாகி அல்லது விசையால் சிராய்த்து உடனடியாக ஏற்படுகிறது. தோல்கிழிதலும் வெட்டும் பொத்தலும் திறந்த காயத்தையும் சிராய்த்தல் உட்காயத்தையும் ஏற்படுத்தும். நோயியலில், இது தோலின் புறணியைச் சிதைக்கும் கூரிய அடிபடுதலாக கூறப்படுகிறது.
காய வகைபாடு
[தொகு]மாசு மட்டத்தைப் பொறுத்து காயத்தைப் பின்வருமாறு பகுக்கலாம்:
- தூய காயம் – தொற்ருநீக நிலைகளில் உருவான காயம். இதில் நோயீனி உயிரி அமையாது. சிக்கலின்றி ஆற்றிவிடலாம்.
- மாசுபடிந்த காயம் – தற்செயலான அடிபடுதலால் நேரும் காயம். இதில் நோயீனி உயிரியும் அயல்பொருள்களும் இருக்கும்.
- தொற்றுபடிந்த காயம் அல்லது புண் – இதில் நோய்யினி உயிரிகள் அமைந்து பெருகும். மஞ்சள் புறத்தோற்றம், புண்மை, சிவப்புநிறம், நீர்வடிதல், சீழ் ஆகிய தொற்று அறிகுறிகள் அமைந்திருக்கும்.
- அழுந்துபுண் அல்லது படுக்கைப் புண் – நெடுநாட்கள் தொடர்நிலையால் நோயீனி உயிரிகள் தொற்றிய புண். இதை ஆற்றுவது அரிதாகும் .
திறந்த காயங்கள்
[தொகு]காயத்தை ஏற்படுத்திய பொருளைக் கொண்டு திறந்த காயத்தை வகைபடுத்தலாம்:
- வெட்டுகள் அல்லது வெட்டுகாயங்கள் – கண்ணாடிச் சில்லு, மழிப்பு அலகு, கத்தி அலகு போன்ற தூய கூரிய விளிம்பு கொண்ட பொருளால் ஏற்படுகின்றன.
- கிழிவுகள் – ஒழுங்கற்ர கிழிவுக் காயங்கள். மொக்கையான பொருளால் ஏற்படுகிறது. இதில் கிழிவுகளும் வெட்டுகளும் ஒழுங்காகவோ ஒழுங்கற்றோ அமையும். கிழிவு தவறாக வெட்டோடு குழப்பப்படுகிறது. தாளால் ஏற்படும் வெட்டு மேலீடான கிழிவே ஆகும்.[1]
- சிராய்ப்புகள் – இவை மேலீடான காயங்கள் ஆகும். இதில் தோலின் புறணி அடுக்கு மட்டும் செதுக்கப்படுகிறது. இவை கரடான தரைப் பரப்பில் சறுக்கி விழும்போது ஏற்படும்.
- நழுவல் அல்லது விலகல் வகை காயங்கள் – இயல்பாக இருக்கும் இருப்பில் இருந்து விசையால் உடல் உறுப்பு இடப்பெயர்வுறும் காயங்கள் அகும். இவை வெட்டப்படாத ஆனால் முனைப்பகுதி இழுக்கப்பட்ட துணிப்புக் காயங்கள் ஆகும்.
- பொத்தல் காயங்கள் –இவை சில்லு, நகம், ஊசி போன்றவற்றால் தோலைப் பொத்துவதால் ஏற்படும் காயங்கள் ஆகும்.
- ஊடுருவு காயங்கள் – இவை தோலின் உட்புறம் ஊடுருவும்படி கத்தியால் குத்துவதல் உருவாகும் கயங்கள் ஆகும்.
- குண்டடிபட்ட காயங்கள் – இவை குண்டோ அல்லது அதைப் போன்ற எறிபடைகளோ உடலின் உள்ளே புகுந்து ஏற்படும் காயங்கள் ஆகும். இதில் இருகாயங்கள் புகுமிடத்திலும் வெளியேறும் இடத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு. இவை உட்புகு காயங்கள் என்றும் வழங்கும்.
மூடிய காயங்கள்
[தொகு]மூடிய காயங்கள் அல்லது உட்காயங்கள் சிலவே எனினும் திறந்த காயங்களைப் போலவே இடரானவை:
- குருதிப் புற்று – குருதிக்குழலின் சிதைவால் ஏற்பட்டு தோலடியில் குருதியைத் திரட்டுகிறது.
- உள் குருதிக்குழல் நோயால் ஏற்படும் குருதிப் புற்று petechiae, purpura, ecchymosis என மூவகைப்படும். இவை மூன்றாக புற்றின் அளவை வைத்தே பிரிக்கப்படுகின்றன.
- வெளிப்புற காய வாயில் தரும் குருதிப் புற்று- இவை பொதுவாக கடிப்புகள் அல்லது கடிபுண்கள் எனப்படுகின்றன.
- நொறுக்கு காயம் – பேரளவு விசையை நெடுநேரம் தருவதால் உடலில் ஏற்படும் சிதைவுக் காயங்கள்.
-
கூரிய பொருளால் தானே காயப்படுத்திக் கொள்ளல்
-
திறந்த காயம் (கிழிவு)
-
காலில் உள்ள கீறல் காயம்
-
பாத அடியில் அமைந்த தொற்றுள்ள பொத்தல் காயம்.
-
பொத்தல் காயம் ஈட்டிப் பயிற்சி விளையாட்டில் ஏற்பட்டது.
-
வெட்டு காயம்: விரலில் உள்ல சிறுவெட்டு.
-
இடது மோதிர விரலில் உள்ள விரல்நுனி வெட்டு காயம்.
-
கீழ்க்காலில் உள்ள சிராய்ப்புக் காயம். கினியா பிசாவு, 1974
நோய் உடலியக்கவியல்
[தொகு]காயத்தை ஆற்ற, உடல் காயம் ஆற்றல் எனும் பல செயல்களின் நீண்ட தொடர்நிகழ்வைத் தொடங்கி நிறைவேற்றுகிறது
நோய்முதல் அறிதல்
[தொகு]காயங்கள் பல நுட்பங்களால் பதிவு செய்யப்பட்டு காயமாறும் முன்னேற்றதின்போது பயன்படுத்தலாம். இவை கீழே தரப்படுகின்றன:[2]
- ஒளிப்படங்கள் எடுத்து கணினிவழி அளவைக் கணித்தல்
- அசெட்டேட்டுத் தாளால் காயப்பதிவு எடுத்தல்
- குண்டின் காயக் கடிகை
காய மேலாண்மை
[தொகு]காயம் ஆற்றும் முறை காயத்தின் வகை, காரணம், ஆழம் ஆகிய காரணிகளையும் தோலுக்கடியில் உள்ள வேறு பகுதிகளும் அடிபட்டுள்ளனவா என்பதையும் சார்ந்தமையும். அண்மைக் கீறல்களுக்கான சிகிச்சை காயத்தை ஆய்ந்து தூய்மை செய்து காயத்தை மூடுவதாகும். மேலீடான சிராய்ப்பு போன்ற சிறுகாயங்கள் தாமாகவே ஆறிவிடும். தோலின் நிறம் மட்டும் மாறும். அதுவும் ஓரிரு வாரங்களில் மறைந்துவிடும். தோலின் புறணி வழியாக அடிக்கொழுப்பு அடுக்குக்குச் செல்லாத சிராய்ப்புகளுக்குத் தனிச்சிகிச்சை ஏதும் தேவைப்படாது. காய இடத்தைச் சவுக்காரத்தாலும் நீராலும் கழுவினாலே போதும். பொத்தல் காயங்களில் உள்லூடுருவலைப் பொறுத்து தொற்றுபற்ற வாய்ப்புள்ளது. பொத்தலின் வாய் குச்சுயிரிகளும் சில்லுகளும் நீக்க திறந்தே வைக்கப்படும்.
தூய்மைபடுத்தல்
[தொகு]காயத்தை மூடும் முன்பு அதைத் தூய்மை செய்யவேண்டிய தேவை மிகக் குறைவாகவே அமையும்.[3] மிக எளிய கீறல்களுக்குத் தூய்மை செய்ய தண்ணீரோ தொற்றுநீக்க உப்புக் கரைசலோ பயன்படுத்தலாம்.[3] உயர்தரம் வாய்ந்த தூய்மையான குழாய்நீர் கிடைக்கும் இடங்களில் அதைப் பயன்படுத்தும்போது தொற்று வீதம் குறைவாகவே உள்ளது.[3] Cleaning of a wound is also known as 'wound toilet'.[4]
காயம் மூடல்
[தொகு]ஒருவர் அடிபட்ட ஆறுமணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றால் காயத்தை மதிப்பிட்டு விட்டுக் காயத்தைத் துடைத்து உடனே மூடிவிடுவர். இந்நிலையில், உடனே மூடுவதிலும் சில கோட்பாட்டுநிலைச் சிக்கல்கள் இடர்களும் உள்ளன.[5] சிலர் 24 மணிநேரம் காலந்தாழ்த்திக் காயத்தை மூடுவர்; சிலர் காயத்தை உடனே மூடிவிடுவர்.[5] காயத்தை மூடும்போது தூய தொற்றுநீக்கா கையுறையும் தொற்றுநீக்கிய கையுறையும் சமமானவையே.[6] காயத்தை மூட முடிவெடுத்ததும் மூடும் முன்பு பலநுட்பங்களைப் பயன்படுத்தலாம். இதற்குப் கட்டு நாடாவையோ சயனோ அக்ரிலேட்டு பசையையோ அறுவைத் தையல்களையோ தைப்புக் கம்பிகளையோ பயன்படுத்தலாம். இதற்கு உறிஞ்சாத தையல்களைவிட உறிஞ்சுவகைத் தைப்புகளைப் பயன்படுத்தலாம். இவற்றை நீக்க வேண்டியதில்லை. குறிப்பாக இவை சிறுவர்களுக்கு மிகவும் சிறந்தவை.[7] ஊசி போடும்போது வலி குறைய லிடோக்கைனின் தெளிக்கலாம்.[8] ஒட்டு பசைகளும் தையல்களும் 5 செமீ அளவினும் குறைந்த சிறுகீறல்களுக்கு நல்லவை .[9] ஒட்டு பசையின் பயன்பாடு மருத்துவரின் நேரத்தைக் காப்பதோடு நோயாளியின் வலியையும் குறைக்கும். காயம் கூடுதல் வீத்த்தில் திறந்து கொண்டாலும் சிவப்பு நிறம் குறைவாகவே அமையும்.[10] இரண்டுக்கும் தொற்று இடர் (1.1%) ஒரே அளவாகவே அமையும். உயர் இழுவிசையும் அடிக்கடி இயக்கமும் உள்ல உறுப்புகளில் அதாவது மூட்டுகளிலும் முதுகந் தண்டிலும் ஒட்டு பசையைப் பயன்படுத்தக் கூடாது.[9]
கட்டுகட்டல்
[தொகு]மாற்று மருந்து
[தொகு]சிக்கலாக்கங்கள்
[தொகு]ஆறாத காய ஆய்வு
[தொகு]ஆறாத காயங்கள்
[தொகு]வரலாறு
[தொகு]ஆராய்ச்சி
[தொகு]மாந்தரிலும் எலிகளிலும் பெண்பால் சுரப்புநீர் காயம் ஆறும் வேகத்தையும் தரத்தையும் கட்டுபடுத்துகிறது.[11]
இவற்றையும் படிக்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pediatrics, American Academy of (2011). First Aid for Families (in ஆங்கிலம்). Jones & Bartlett Publishers. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780763755522.
- ↑ Thomas, A.C.; Wysocki, A.B. (February 1990). "The healing wound: a comparison of three clinically useful methods of measurement". Decubitus 3 (1): 18–20, 24–5. பப்மெட்:2322408.
- ↑ 3.0 3.1 3.2 "Water for wound cleansing". Cochrane Database of Systematic Reviews 2: CD003861. 15 February 2012. doi:10.1002/14651858.CD003861.pub3. பப்மெட்:22336796.
- ↑ Simple wound management பரணிடப்பட்டது 27 சூன் 2015 at the வந்தவழி இயந்திரம், patient.info (website), accessed 8 January 2012
- ↑ 5.0 5.1 Eliya-Masamba, Martha C.; Banda, Grace W. (2013-10-22). "Primary closure versus delayed closure for non bite traumatic wounds within 24 hours post injury". The Cochrane Database of Systematic Reviews (10): CD008574. doi:10.1002/14651858.CD008574.pub3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:24146332.
- ↑ Brewer, JD; Gonzalez, AB; Baum, CL; Arpey, CJ; Roenigk, RK; Otley, CC; Erwin, PJ (1 September 2016). "Comparison of Sterile vs Nonsterile Gloves in Cutaneous Surgery and Common Outpatient Dental Procedures: A Systematic Review and Meta-analysis.". JAMA Dermatology 152 (9): 1008–14. doi:10.1001/jamadermatol.2016.1965. பப்மெட்:27487033.
- ↑ "BestBets: Absorbable sutures in pediatric lacerations". Archived from the original on 26 திசம்பர் 2008.
- ↑ "Adjusting the pH of lidocaine for reducing pain on injection". The Cochrane Database of Systematic Reviews (12): CD006581. December 2010. doi:10.1002/14651858.CD006581.pub2. பப்மெட்:21154371.
- ↑ 9.0 9.1 Cals, J.W.; de Bont EGPM (2012). "Minor incised traumatic laceration". BMJ 345: e6824. doi:10.1136/bmj.e6824. பப்மெட்:23092899 இம் மூலத்தில் இருந்து 5 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105202631/http://www.bmj.com/content/345/bmj.e6824.
- ↑ Farion, K (2002). Farion, Ken J.. ed. "Tissue adhesives for traumatic lacerations in children and adults". Cochrane Database Syst Rev (3): CD003326. doi:10.1002/14651858.CD003326. பப்மெட்:12137689.
- ↑ "Sex Hormones and Wound Healing". Wounds. 2006 இம் மூலத்தில் இருந்து 7 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130107094207/http://www.medscape.com/viewarticle/524313_3.
வெளி இணைப்புகள்
[தொகு]- US based wound healing society
- Association for the Advancement of Wound Care AAWC
- European Wound Management Association - EWMA works to promote the advancement of education and research.
- WOUNDS, காயம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை - ஆங்கிலத்தில்.