iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/பச்சா_ராமச்சந்திர_ராவ்
பச்சா ராமச்சந்திர ராவ் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சா ராமச்சந்திர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சா ராமச்சந்திர ராவ்
பிறப்பு21 மார்ச்சு 1942
கவுதாவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு10 சனவரி 2010(2010-01-10) (அகவை 67)
மதுரை, இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஉலோகவியல், பொருளறிவியல்,
பணியிடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம் (இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி)
தேசிய உலோகவியல் ஆய்வகம்
மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம் (இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி)
இந்திய அறிவியல் நிறுவனம்
உசுமானியா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அனந்த ராமன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கமனியோ சட்டோபாத்யாய
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1985)
தேசிய உலோகவியலாளர் விருது (2004)
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் தங்கப் பதக்கம், இதேஅஅ (2005)
துணைவர்சுதா ராவ்
பிள்ளைகள்சுப்ரன்னா பச்சா தண்டாமுடி
அனிமேசு பச்சா

பச்சா ராமச்சந்திர ராவ் (Patcha Ramachandra Rao; 21 மார்ச் 1942-10 சனவரி 2010) ஓர் உலோகவியலாளரும் நிர்வாகியும் ஆவார். இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் மேனாள் மாணவர், பேராசிரியர் மற்றும் துணைவேந்தர் என்ற தனித்துவத்தை கொண்ட ஒருவர் எனும் பெருமையினை பெறுகின்றார். 1992 முதல் 2002 வரை, ராவ் ஜாம்சேத்பூரில் உள்ள தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார். 2005ஆம் ஆண்டில் பனாரசு பல்கலைக்கத்தின் துணைவேந்தராக இருந்த பிறகு, இவர் மேம்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு நிறுவனத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். 2007ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இவர் இங்குப் பணியாற்றினார். 2007-இல் பணி ஓய்வு பெற்றவுடன் ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்து தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான பன்னாட்டு மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் ராஜா ரமண்ணா சகாவாக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ராவ் 1966-இல் சுதா ராவை மணந்தார். சுதா 1980ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாரணாசியில் ஆந்திரா வங்கிக் கிளையைத் தொடங்கியபோது அந்த வங்கியில் பணியில் சேர்ந்தார்.[1]

விருதுகள்

[தொகு]
  • பொதுநலவாய கல்விசார் பணியாளர் உதவித்தொகை, 1970-71.கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்சு பல்கலைக்கழகங்கள் [2]
  • தேசிய உலோகவியலாளர் தின விருது, எஃகு மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம், இந்திய அரசு, 1979[3]
  • இன்டர்கோசுமோசு பதக்கம், சோவியத் ஒன்றியம் 1984
  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, 1985[4]
  • புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது, உலோகவியல் துறை, பனாரசு இந்துப் பல்கலைக்கழகம், 1994
  • புகழ்பெற்ற பொருள் விஞ்ஞானி விருது, ஐ. இ. (இந்தியா) (1995)
  • பொருள் அறிவியலுக்கான இந்திய தேசிய அறிவியல் அகாதமி பரிசு 1997
  • வாஸ்விக் விருது 1997[5]
  • ஓம் பிரகாசு பாசின் விருது 1998
  • புகழ்பெற்ற பொறியாளர் விருது, ஐ. இ. (இந்தியா) (1998)
  • நாயுடம்மா விருது (1999)
  • புகழ்பெற்ற விரிவுரையாளர் விருது, இந்தியப் பொருள் ஆராய்ச்சி சங்கம், 1999-2001[6]
  • புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது, இந்திய அறிவியல் நிறுவனம் 2001
  • எம்ஆர்எஸ்ஐ-ஐசிஎஸ்சி சூப்பர் கடத்தல் & பொருட்கள் அறிவியல் பரிசு-2002[7] & 2005[8]
  • சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது, எல் இ ஆர் ஐ ஜி-2002
  • சிறந்த தொழில்நுட்ப ஆய்வறிக்கைக்கான பேராசிரியர் பி. பானர்ஜி விருது (2001-2002)
  • லயோலா ரத்னா விருது-ஆந்திர லயோலா கல்லூரி, விஜயவாடா 2003
  • தேசிய உலோகவியலாளர் விருது, எஃகு மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம், இந்திய அரசு, 2004 [9]
  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் தங்கப் பதக்கம், 2005 [10][11]
  • டாக்டர் ராமினேனி அறக்கட்டளை (யு. எஸ். ஏ.) விசிடா விருது, 2007)

அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராக

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chronicle Interview for Prof. P Ramachandra Rao". Archived from the original on 5 April 2010. பார்க்கப்பட்ட நாள் 22 March 2010.
  2. Directory of Commonwealth Scholars and Fellows 1959–2009 பரணிடப்பட்டது 16 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. Metallurgist of the Year Award பரணிடப்பட்டது 8 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  4. "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners, CSIR 1958 – 1998" (PDF). Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 22 March 2010.
  5. VASVIK Award for Material Science and Technology பரணிடப்பட்டது 26 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம்
  6. MRSI DISTINGUISHED LECTURER SHIP AWARD பரணிடப்பட்டது 19 மே 2009 at the வந்தவழி இயந்திரம்
  7. MRSI-ICSC SUPER CONDUCTIVITY AND MATERIALS SCIENCE AWARD (Senior) பரணிடப்பட்டது 19 மே 2009 at the வந்தவழி இயந்திரம்
  8. MRSI-ICSC SUPER CONDUCTIVITY AND MATERIALS SCIENCE PRIZE பரணிடப்பட்டது 19 மே 2009 at the வந்தவழி இயந்திரம்
  9. National Metallurgist Award பரணிடப்பட்டது 8 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  10. Award Announcement பரணிடப்பட்டது 12 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம்
  11. Shanti Swarup Bhatnagar Gold Medal[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Profile of Dr. Patcha Ramachandra Rao பரணிடப்பட்டது 12 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம்
  13. List of Members பரணிடப்பட்டது 30 மே 2009 at the வந்தவழி இயந்திரம்

ஆதாரங்கள்

[தொகு]
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
20 பிப்ரவரி 2002 - 19 பிப்ரவரி 2005
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சா_ராமச்சந்திர_ராவ்&oldid=4133459" இலிருந்து மீள்விக்கப்பட்டது