த மெக்
த மெக் The Meg | |
---|---|
இயக்கம் | ஜான் டர்டெல்டப் |
மூலக்கதை | மெக்: எ நாவல் ஆஃப் டீப் டெரர் படைத்தவர் ஸ்டீவ் அல்டென் |
திரைக்கதை | |
இசை | ஹாரி கிரீக்சன்-வில்லியம்ஸ் |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | ஸ்டீவன் கெம்பெர் |
கலையகம் | |
விநியோகம் | |
வெளியீடு | ஆகத்து 10, 2018(United States/China) |
ஓட்டம் | 113 நிமிடங்கள்[4] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன்[6] |
த மெக் (The Meg) என்பது 2018 ஆண்டைய அதிரடி அறிபுனைவு திகில் திரைப்படமாகும். அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளரான ஸ்டீவ் அல்டென் எழுதி 1997இல் வெளியான மெக்: எ நாவல் ஆஃப் டீப் டெரர் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு டீன் ஜார்ஜாரஸ், ஜான் ஹோபர் மற்றும் எரிக் ஹோயர் ஆகியோர் எழுத, ஜான் டர்டெல்டூப் இயக்கிய திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் ஜேசன் ஸ்டேதம், லீ பிங்கிங்கிங், ரெய்ன் வில்சன், ரூபி ரோஸ், வின்ஸ்டன் சாவ் மற்றும் கிளிஃப் கர்டிஸ் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தில் 75 அடி நீள உடலுள்ள மெகலோடன் சுறா கடற்பகுதியில் மனிதர்களை விரட்டி வேட்டையாடுவதாக காட்டப்பட்டுள்ளது. இப்படம் அமெரிக்க-சீன கூட்டுத் தயாரிப்பில், இரு நாடுகளிலும் 2018 ஆகத்து 10 இல், ரியல் டி 3 டி, டால்பி சினிமா, மற்றும் ஐமேக்ஸ் ஆகியவற்றில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தமிழ் மொழியாக்கப்படமானது தி மெக் ஆழ்கடல் அரக்கன் என்ற பெயரில் வெளியாக உள்ளது.
அனுமானம்
[தொகு]பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலை ஆண்டு வந்து தற்பொது அழிந்துவிட்டதாக கருதப்படும் ‘மெகலோடன்’ என்ற 75 அடி நீள உடலைக் கொண்ட சுறா மீண்டும் சீனக் கடற்கரையிலிருந்து சுமார் நூறு மைல்கள் தொலைவில், தட்டுப்படுகிறது. அது பலரை வேட்டையாடும் நிலையில் அதை எதிர்கொள்ளும் ஜோனாஸ் டெய்லர் (ஜேசன் ஸ்டேதம்) என்ற அமெரிக்கக் கடற்படை அதிகாரி தன் குழுவினரைக் காக்க ஈடுபடும் ஆழ்கடல் சாகசங்களே படத்துக்கு அடிப்படையாக உள்ளது.
நடிகர்கள்
[தொகு]- ஜோனஸ் டெய்லராக ஜேசன் ஸ்டேதம்
- சுய்ன் ஜாங்காக லி பிங்கிங்
- ஜாக் மோரிசாக ரெயின் வில்சன்
- ஜாக்க்ஸ் ஹெர்ட்டாக ரூபி ரோஸ்
- டாக்டர் மைவே ஜாங்காக வின்ஸ்டன் சாவ்
- ஜேம்ஸ் "மேக்" மேக்ராக்ட்சாக கிளிஃப் கர்டிஸ்
- டி.ஜே.வாக பேஜ் கென்னடி
- செலஸ்டெ சிங்கராக ஜெசிகா மெக்னியே
- தி வாலாக ஓல்ஃபூர் டேர்ரி ஓலஃப்ஸன்
- டாக்டர் ஹெலராக ரொபர்ட் டெய்லர்
- மீயிங்காக ஷிய்யா சோபியா காய்
- டோஷியாக மோஷி ஒக்கா
- டி ஆஞ்சலோவாக ராப் கிபா-வில்லியம்ஸ்
- மார்க்சாக டவாண்டா மரிமோமோ
தயாரிப்பு
[தொகு]இந்த புத்தக உரிமையை முதலில் 1997 ஆம் ஆண்டு டிஸ்னியால் வாங்கப்பட்டது,[7] இருப்பினும் 2015 காலகட்டத்தில் உரிமையானது வார்னர் பிரதர்சுக்கு கைமாறியது. அந்த ஆண்டு சூன் மாதத்தில், எலி ரோத்துடன் இயக்கத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது,[8] இறுதியாக படத்தின் இயக்கமானது ஜோன் டர்டெல்டூப்பிடம் வந்து சேர்ந்தது.
நியூசிலாந்தின், மேற்கு ஆக்லாண்டில், 2016 அக்டோபர் 13 அன்று படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு துவங்கியது.[9][10] 2017 சனவரி 11 அன்று முதன்மைப் படப்பிடிப்பு முடிவடைந்தது.[சான்று தேவை]
வெளியீடு
[தொகு]த மெக் படமானது சீனாவில் கிராவிட்டி பிக்சர்சாலும்[1] அமெரிக்காவில் வார்னர் புரோசால் 2018 மார்ச் 2இல் வெளியிடப்படவுள்ளதாக இருந்தது.[11] வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் சீனாவின் கிராவிட்டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் சீனாவில் 2018 ஆம் ஆண்டு சீன புத்தாண்டின்போது படத்தை வெளியிடுவதாக தெரிவித்தன. 2018 மார்ச் 2இல் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட ஆண்டு விடுமுறை நாட்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 2018 பெப்ரவரி 16இல் துவங்கியது.[1] இதனால் த மெக் படத்தின் வெளியீடு 2018 ஆகத்து 10க்கு தள்ளிப்போடப்பட்டது. படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டமானது யூடியூப்பில் 2018 ஏப்ரல் 9, அன்று வெளியிடப்பட்டது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Frater, Patrick (October 13, 2016). "China to Get First Release of Shark Thriller 'Meg'". Variety. பார்க்கப்பட்ட நாள் December 19, 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Film releases". Variety Insight. பார்க்கப்பட்ட நாள் November 15, 2016.
- ↑ "China to Get First Release of Shark Thriller ‘Meg’". Variety. October 13, 2016. https://variety.com/2016/film/asia/china-to-get-first-release-of-shark-thriller-meg-1201887432/. பார்த்த நாள்: April 12, 2018.
- ↑ "THE MEG (12A)". Warner Bros. Entertainment UK Ltd. British Board of Film Classification. Archived from the original on ஏப்ரல் 9, 2019. பார்க்கப்பட்ட நாள் July 5, 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Meg (2018)". AllMovie. பார்க்கப்பட்ட நாள் April 10, 2018.
- ↑ Frater, Patrick (March 3, 2017). "Warner's 'Meg' Helps Launch New Zealand's Kumeu Film Studio (Exclusive)". Variety. பார்க்கப்பட்ட நாள் September 17, 2017.
- ↑ "{TB Exclusive} In 2008 the film franchise rights were optioned in perpetuity by producer Belle Avery with her company Apelles Entertainment. After eight long years with multiple trips to China, Jiang Wei head of Gravity Pictures partnered with Apelles Entertainment, after development Warner Bros who came on board. Long-Awaited Giant Shark Thriller “Meg” Swims to Warner Bros.". Tracking Board. June 3, 2015. http://www.tracking-board.com/tb-exclusive-long-awaited-giant-shark-thriller-meg-swims-to-warner-bros/. பார்த்த நாள்: September 17, 2017.
- ↑ Kroll, Justin (June 16, 2015). "Eli Roth to Direct Giant Shark Thriller ‘Meg’ for Warner Bros. (Exclusive)". Variety. https://variety.com/2015/film/news/eli-roth-direct-giant-shark-thriller-meg-for-warner-bros-1201520955/. பார்த்த நாள்: September 17, 2017.
- ↑ Butler, Karen (October 15, 2016). "Jason Statham, Jon Turteltaub start shooting shark tale 'Meg' in New Zealand". UPI. http://www.upi.com/Entertainment_News/Movies/2016/10/15/Jason-Statham-Jon-Turteltaub-start-shooting-shark-tale-Meg-in-New-Zealand/1101476584740/. பார்த்த நாள்: September 17, 2017.
- ↑ "Meg: Filming Begins on Giant Shark Movie with Jason Statham". Collider. October 13, 2016. http://collider.com/meg-filming-begins-jason-statham-li-bingbing/. பார்த்த நாள்: September 17, 2017.
- ↑ McNary, Dave (May 16, 2016). "Jason Statham's Shark Movie 'Meg' Gets 2018 Release Date". Variety. https://variety.com/2016/film/news/meg-release-date-jason-statham-1201776331/. பார்த்த நாள்: September 17, 2017.
- ↑ "The Meg Trailer 2018". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் June 26, 2018.