தொப்காப்பி மாளிகை
தொப்காப்பி மாளிகை | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Topkapı Sarayı طوپقپو سرايى | |||||||||||||
பொற்கொம்புப் பகுதியில் இருந்து தொப்காப்பி மாளிகையின் தோற்றம் | |||||||||||||
பொதுவான தகவல்கள் | |||||||||||||
வகை |
| ||||||||||||
கட்டிடக்கலை பாணி | ஓட்டோமான், பரோக் | ||||||||||||
இடம் | இசுத்தான்புல், துருக்கி | ||||||||||||
ஆள்கூற்று | 41°0′46.8″N 28°59′2.4″E / 41.013000°N 28.984000°E | ||||||||||||
கட்டுமான ஆரம்பம் | 1465 | ||||||||||||
கட்டுவித்தவர் | ஓட்டோமான் சுல்தான்கள் | ||||||||||||
உரிமையாளர் | துருக்கி அரசு | ||||||||||||
தொழில்நுட்ப விபரங்கள் | |||||||||||||
அமைப்பு முறை | முற்றங்களைச் சூழவுள்ள உயரங்குறைந்த பல கட்டிடங்கள், மண்டபங்கள், பூங்காக்கள் என்பன | ||||||||||||
அளவு | 592,600 முதல் 700,000 m2 (6,379,000 முதல் 7,535,000 sq ft) | ||||||||||||
வடிவமைப்பும் கட்டுமானமும் | |||||||||||||
கட்டிடக்கலைஞர்(கள்) | மெகமெத் II, அலாவுதீன், தாவூத் ஆகா, மிமார் சினான், சார்க்கிசு பால்யான்[1] | ||||||||||||
வலைதளம் | |||||||||||||
topkapisarayi
|
தொப்காப்பி மாளிகை (துருக்கியம்: Topkapı Sarayı[2] அல்லது உதுமானியத் துருக்கியம்: طوپقپو سرايى, Ṭopḳapu Sarāyı),[3] அல்லது செராக்லியோ,[4] என்பது துருக்கியின் இசுத்தான்புல்லில் உள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். 15 ஆம் நூற்றாண்டில் இது ஓட்டோமான் சுல்தான்களின் முதன்மை வதிவிடமாகவும், நிர்வாகத் தலைமையிடமாகவும் இருந்தது.
கொன்சுதன்தினோப்பிளை வெற்றிகொண்ட பின் ஆறு ஆண்டுகள் கழித்து வெற்றியாளன் மெகமெத்தின் ஆணைப்படி 1459 இல் கட்டுமான வேலைகள் தொடங்கின. பெயாசிட் சதுக்கத்தில் உள்ள பழைய மாளிகையில் இருந்து வேறுபடுத்துவதற்காக தொப்காப்பி மாளிகையை முன்னர் "புதிய மாளிகை" என அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் "பீரங்கி வாயில்" எனப் பொருள்படும் "தொப்காப்பி" என்னும் இன்றைய பெயர் வழக்குக்கு வந்தது.[5] பல நூற்றாண்டுகளாக விரிவடைந்து வந்த இந்த மாளிகைத் தொகுதி 1509 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்துக்குப் பின்னரும், 1665 இல் இடம்பெற்ற தீ விபத்துக்குப் பின்னரும் பெரிய அளவில் திருத்தி அமைக்கப்பட்டன. மாளிகைத் தொகுதி நான்கு பெரிய முற்றங்களையும் பல சிறிய கட்டிடங்களையும் உள்ளடக்கியிருந்தது. சுல்தான் குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் ஹாரெம் எனப்படும் அந்தப்புரத்தில் வசித்தனர். முன்னணி அரச அதிகாரிகள் அரசவைக் கட்டிடத்தில் கூட்டங்களை நடத்தினர்.
17 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொப்காப்பி படிப்படியாகத் தனது முக்கியத்துவத்தை இழந்தது. அக்காலத்தைச் சேர்ந்த சுல்தான்கள் பொசுபோரசுக் கரையோரமாக இருந்த தமது புதிய மாளிகைகளிலேயே கூடிய நேரத்தைச் செலவிட விரும்பினர். 1856 ஆம் ஆண்டில் சுல்தான் முதலாம் அப்துல்மெசித் தனது அரசவையை புதிதாகக் கட்டப்பட்ட தொல்மாபாச்சே மாளிகைக்கு மாற்ற முடிவு செய்தார். அரசாங்கத்தின் நிதிப் பகுதி, நூலகம், நாணய உற்பத்திப் பிரிவு உள்ளிட்ட சில தொடர்ந்தும் தொப்காப்பி மாளிகையிலேயே செயற்பட்டன.
1923 இல் ஓட்டோமான் பேரரசு முடிவுற்றதைத் தொடர்ந்து, 1924 ஏப்ரல் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க ஆணை ஒன்றின் மூலம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. தொப்காப்பி மாளிகை அருங்காட்சியகம் பண்பாடு, சுற்றுலாத்துறை என்பவற்றுக்கான அமைச்சினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. இந்த மாளிகைத் தொகுதியில் நூற்றுக் கணக்கான அறைகளும் மண்டபங்களும் உள்ளன. ஆனால் இவற்றில் சில முக்கியமானவற்றை மட்டுமே பொது மக்கள் பார்க்க முடியும். ஓட்டோமான் பேரரசின் அந்தப்புரம், நிதிக் கருவூலம் என்பன இவற்றுள் அடங்குகின்றன. கரண்டி செய்வோர் வைரம் எனப்படும் வைரமும், தொப்காப்பிக் குத்துவாளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகச் சேகரிப்பில் ஓட்டோமான் உடைகள், ஆயுதங்கள், பாதுகாப்புக் கவசங்கள், சிற்றோவியங்கள், மதம் சார்ந்த எச்சங்கள், தொப்காப்பி கையெழுத்துப்படி போன்ற கையெழுத்துப்படிகள் போன்றவை உள்ளன. இந்த அருங்காட்சியகத் தொகுதிக்கு அமைச்சு அதிகாரிகளும், துருக்கியின் படைத்துறையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய காவலர்களும் பாதுகாப்பு வழங்குகின்றனர். தொப்காப்பி மாளிகைத் தொகுதி இசுத்தான்புல் வரலாற்றுப் பகுதிகளின் ஒரு பகுதியாகும். இசுத்தான்புல்லின் பல களங்களை உள்ளடக்கிய இந்த வரலாற்றுப் பகுதி 1985 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[6]
வரலாறு
[தொகு]பொசுபோரசு நீரிணை மர்மாராக் கடலைச் சந்திக்கும் இடமாகிய பொற்கொம்புப் (Golden Horn) பகுதியை நோக்கியிருக்கும் முன்னீட்சியான செராக்கிளியோ முனையில் இந்த மாளிகைத் தொகுதி அமைந்துள்ளது. இந்த நிலப்பகுதி மலைப்பாங்கானது. அத்துடன் இம்மாளிகையும் கடலை அண்மித்து இருக்கக்கூடிய உயரமான இடத்திலேயே அமைந்துள்ளது. கிரேக்க, பைசண்டியக் காலத்தில், கிரேக்க நகரமான பைசண்டியனின் அக்குரோப்போலிசு இவ்விடத்திலேயே இருந்தது. 1453 இல் சுல்தான் இரண்டாம் மெகமெத் இசுத்தான்புல்லை வெற்றிகொண்ட பின்னர் பெரிய கொன்சுதந்தினோப்பிள் மாளிகை பெருமளவு அழிவடைந்திருந்தது.[7] தொடக்கத்தில் ஓட்டோமான் அரசவை, இன்று இசுத்தான்புல் பல்கலைக்கழகமாக இருக்கும் பெயாசித் சதுக்கத்தில் உள்ள பழைய மாளிகையில் அமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ director; Batur, editor Afife (2006). Historic peninsula. Istanbul: Chamber of Architects of Turkey Istanbul Metropolitan Branch. pp. 65–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9753958994.
{{cite book}}
:|first2=
has generic name (help) - ↑ Pronounced Turkish pronunciation: [ˈtopkapɯ saɾaˈjɯ].
- ↑ Necipoğlu, Gülru (1991). Architecture, Ceremonial, and Power: The Topkapı Palace in the Fifteenth and Sixteenth Centuries. Cambridge: MIT Press. pp. 278 (Plate 13). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-14050-0.
- ↑ "Topkapi Palace Museum - museum, Istanbul, Turkey".
- ↑ "Top Capou (i.e. Top Kapı), Constantinople, Turkey". World Digital Library. 1890–1900. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
- ↑ ICOMOS (2006). "2006 Periodic Reporting" (PDF). State of Conservation of World Heritage Properties in Europe SECTION II. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2008-09-17.
- ↑ Necipoğlu, Gülru (1991). Architecture, ceremonial, and power: The Topkapı Palace in the fifteenth and sixteenth centuries. Cambridge, Massachusetts: The MIT Press. pp. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-14050-0.