தேவகடத் தாலுகா
தேவகாட் தாலுகா (Devgad taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் தேவகோட் ஆகும். அரபுக் கடலை ஒட்டி அமைந்த தேவ்கோட் தாலுகாவில் சிறுதுறைமுகம் உள்ளது. [2] அல்போன்சா மாம்பழ விளைச்சலைக்கு பெயர் பெற்றது.2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 98 வருவாய் கிராமங்களை கொண்டது.[3] இத்தாலுகா அல்போன்சா மாம்பழம் ஏற்றுமதி, மீன்பிடி துறைமுகம், காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கு பெயர் பெற்றது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,49,335 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 124,446 மற்றும் பெண்கள் 124,889 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 42129 - 17% ஆகும். சராசரி எழுத்தறிவு 63.04% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 9,421 மற்றும் 49,930 ஆகவுள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.42%, இசுலாமியர்கள் 4.41% மற்றும் பிறர் 0.17% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[4]
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், தேவ்காட் தாலுகா taluka (1981–2010, extremes 1944–2006) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.4 (97.5) |
36.9 (98.4) |
39.2 (102.6) |
37.2 (99) |
38.0 (100.4) |
37.2 (99) |
32.4 (90.3) |
33.0 (91.4) |
32.9 (91.2) |
36.6 (97.9) |
36.3 (97.3) |
35.2 (95.4) |
39.2 (102.6) |
உயர் சராசரி °C (°F) | 30.8 (87.4) |
30.8 (87.4) |
31.4 (88.5) |
32.2 (90) |
33.4 (92.1) |
31.0 (87.8) |
29.2 (84.6) |
28.7 (83.7) |
29.4 (84.9) |
31.3 (88.3) |
32.6 (90.7) |
31.7 (89.1) |
31.0 (87.8) |
தாழ் சராசரி °C (°F) | 19.6 (67.3) |
20.2 (68.4) |
22.5 (72.5) |
24.5 (76.1) |
26.2 (79.2) |
24.4 (75.9) |
23.8 (74.8) |
23.4 (74.1) |
23.0 (73.4) |
23.3 (73.9) |
21.8 (71.2) |
20.5 (68.9) |
22.8 (73) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 15.4 (59.7) |
16.2 (61.2) |
18.4 (65.1) |
19.7 (67.5) |
19.4 (66.9) |
17.8 (64) |
18.0 (64.4) |
17.3 (63.1) |
17.3 (63.1) |
15.5 (59.9) |
14.1 (57.4) |
14.5 (58.1) |
14.1 (57.4) |
மழைப்பொழிவுmm (inches) | 0.0 (0) |
0.0 (0) |
0.0 (0) |
2.6 (0.102) |
76.9 (3.028) |
791.9 (31.177) |
786.4 (30.961) |
547.5 (21.555) |
270.0 (10.63) |
70.1 (2.76) |
13.7 (0.539) |
0.2 (0.008) |
2,559.3 (100.76) |
% ஈரப்பதம் | 61 | 63 | 68 | 68 | 70 | 81 | 86 | 87 | 83 | 77 | 67 | 60 | 73 |
சராசரி மழை நாட்கள் | 0.0 | 0.0 | 0.0 | 0.3 | 2.5 | 17.9 | 23.1 | 23.9 | 13.3 | 4.1 | 1.2 | 0.1 | 86.3 |
ஆதாரம்: India Meteorological Department[5][6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tehsils of Sindudurg District
- ↑ "DEVGAD LIGHTHOUSE" (PDF). ww.dgll.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ Villages and Towns of Devgad Taluka
- ↑ Devgadbaria Taluka Population, Caste, Religion Data
- ↑ "Station: Devgad (Devgarh) Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 237–238. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M142. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.