iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/திசுக்கூழ்_கனிமப்புரதச்சிதைப்பி
திசுக்கூழ் கனிமப்புரதச்சிதைப்பி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

திசுக்கூழ் கனிமப்புரதச்சிதைப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரணு மேற்பரப்பினைச் சேர்ந்த திசுக்கூழ் கனிமப்புரதச்சிதைப்பி 14 (MMP14), புரதத்தின் கார்பாக்சில் நுனியுடன் இணைந்த பச்சை ஒளியுமிழ் புரதம் உயிரணு மேற்புறத்தில் உண்டாக்கும் சமிக்ஞை.[1]

திசுக்கூழ் கனிமப்புரதச்சிதைப்பிகள் [Matrix metalloproteinases (MMPs)] துத்தநாகத்தினைச் சார்ந்த அகப்புரதக்கூறுச் சிதைப்பிகளாகும். இவை, மிகப்பெரும் புரதச்சிதைப்பி குடும்பமான மெட்ஜின்சின் உயர்குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்[2].

கூட்டாக இப்புரதச்சிதைப்பிகள், அனைத்து வகை செல்புற தாயப்புரதங்களைச் சிதைக்கும் வல்லமை கொண்டவை. மேலும், பல உயிரியியக்க மூலக்கூறுகளையும் செயல்முறை செய்யவிக்கவல்லன. உயிரணு மேற்பரப்பிலுள்ள ஏற்பிகளைப் பிளவுபடுத்துவதிலும், உயிரணு இறப்பு ஈந்தணைவிகளை விடுவிப்பதிலும் (உதாரணமாக, ஃபாஸ் ஈந்தணைவி; FASL (அ) CD95L) மற்றும் கெமோகைன் (உயிரணு இயக்கி/ஈர்ப்பி)/சைடோகைன் (உயிரணு தொடர்பி/செயலூக்கி) இயக்கல்/செயல்முடக்கல் பணிகளிலும் ஈடுபடுகின்றன[3]. கீழ்வரும் உயிரணு செயலாக்கங்களிலும் இப்புரதச்சிதைப்பிகள் பெரும்பங்கு வகிப்பதாகக் கருதப்படுகின்றது: செல் பெருக்கம், உயிரணு பெயர்ச்சி, உயிரணு ஒட்டிணைவு/பரவல், செல் வேறுபடல், இரத்தக் குழாய் வளர்ச்சி, உயிரணு இறப்பு மற்றும் ஓம்புயிர் பாதுகாப்பு.

முதுகெலும்புயிரிகள், முதுகெலும்பற்றவைகள் மற்றும் தாவரங்களில் இப்புரதச்சிதைப்பிகள் காணப்படுகின்றன. மற்ற அகப்புரதக்கூறுச் சிதைப்பிகளிலிருந்து இவை, கனிம அயனிகளை துணைக்காரணிகளாக சார்ந்திருப்பதிலும், செல்புற தாயங்களைச் சிதைப்பதிலும், குறிப்பிட்ட பரிணாம டி.என்.ஏ. வரிசை முறையினைக் கொண்டிருப்பதிலும் வேறுபடுகின்றன.

கூடுதல் படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Remacle AG, Rozanov DV, Fugere M, Day R, Strongin AY. Furin regulates the intracellular activation and the uptake rate of cell surface-associated MT1-MMP. Oncogene. September 14, 2006;25(41):5648-55
  2. Matrix Metalloproteinases: Its implications in cardiovascular disorders
  3. Van Lint P, Libert C (December 2007). "Chemokine and cytokine processing by matrix metalloproteinases and its effect on leukocyte migration and inflammation". J. Leukoc. Biol. 82 (6): 1375–81. doi:10.1189/jlb.0607338. பப்மெட்:17709402. http://www.jleukbio.org/cgi/pmidlookup?view=long&pmid=17709402. பார்த்த நாள்: 2011-12-29.