கதிரொளி மூலம் குடிநீரின் நுண்ணுயிர் நீக்கம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கதிரொளி குடிநீர் நுண்ணுயிர் நீக்கமுறை (Solar water disinfection) என்பது எவ்வித செலவுமில்லாமல் குடிநீரில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து பாதுகாப்பான குடிநீர் உருவாக்கும் முறையாகும். இம்முறை ஒரு செலவில்லாத ஒர் எளிய முறையாகும். இதற்கு தேவைப்படுவது காலி பெட் புட்டிகள் மட்டுமே.[1][2][3]
ஒரு லிட்டர் முதல் மூன்று லிட்டர்வரை கொள்ளளவு கொண்ட நல்ல நிலையில் உள்ள நிறம் மங்காத வண்ணமல்லாத பெட் புட்டிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் நீரை நிரப்பி மூடியால் இறுக மூடி வீட்டுக்கூரையில் அல்லது நன்கு ஒளிபடக்கூடிய இடத்தில் குறைந்தது ஆறுமணிநேரம் படுக்கை வசத்தில் வைக்கவேண்டும். குறிப்பாக காலை ஓன்பது மணி முதல் மாலை மூன்று மணிவரை வைத்திருப்பது நல்லது. வெப்பம் குறைந்த காலங்களில் எட்டு மணிநேரம் வைத்திருக்கலாம். இதனால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள் அனைத்தும் வெயிலில் உள்ள புற ஊதாக் கதிர்களால் 99.99% வரை நீக்கப்படுகிறது. இதன் பிறகு இந்நீரை குடிக்கப் பயன்படுத்தலாம். இது காய்ச்சிக் குடிப்பதற்கு இணையானது. இதில் எவ்வித எரிபொருள் செலவும் இல்லை எனபது என்பது இதில் உள்ள சிறப்பாகும். இம் முறைக்கு பெட் புட்டிகளை பரிந்துரை செய்யப்பட்டாலும் கதிரொளியில் நீண்ட நேரம் இருப்பதால் ஞெகிழிப் புட்டிகளில் உள்ள வேதிப்பொருட்கள் நீரில் கரையலாம் என்ற ஐயம் உள்ளதால் கண்ணாடி புட்டிகளைப் பயன்படுத்துதல் நலம்.
வெளி இணைப்புகள்
[தொகு]- SODIS
- How does it work பரணிடப்பட்டது 2009-03-30 at the வந்தவழி இயந்திரம்
- WADI - Device for Solar Water Disinfection
- "Plastic versus glass bottles". Archived from the original on 2016-04-06. பார்க்கப்பட்ட நாள் 2015-05-04. (36.0 KB)
- SODIS in Latin America
- covers the concept briefly
- Drinking Water For All பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம் (பி.டி.எவ்) by Anumakonda Jagadeesh. Test results in தமிழ்நாடு, India.
- Kenyans Tap Sun to Make Dirty Water Sparkle Multimedia from CLPMag.org
- Pure water for all, The Hindu Business Line, Apr 15, 2005
- Clean water at no cost, the SODIS wayபரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம், The Hindu, Sep 14, 2006
- A place in the sun physics.org, October 7, 2009
- Glass Bottles and UV Light[தொடர்பிழந்த இணைப்பு] (பி.டி.எவ்) provides data on how much UV light is filtered by various types of glass bottles, August 2008
மேற்கோள்கள்
[தொகு]- ↑ B. Dawney, C. Cheng, R. Winkler, J. M. Pearce. Evaluating the geographic viability of the solar water disinfection (SODIS) method by decreasing turbidity with NaCl: A case study of South Sudan. Applied Clay Science 99:194–200 (2014). open access soon DOI: 10.1016/j.clay.2014.06.032
- ↑ Low-cost solar water purifier for rural households. Anil K. Rajvanshi and Noorie Rajvanshi. Current Science, VOL. 115, NO. 1, 10 JULY 2018
- ↑ "New solar material could clean drinking water" (in en). phys.org. https://phys.org/news/2020-07-solar-material.html.