iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/கடவுளின்_இருப்பு
கடவுளின் இருப்பு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுளின் இருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடவுளின் இருப்பு அல்லது கடவுளின் இருத்தல் (Existence of God) என்பதற்கெதிரான விவாதங்கள் மெய்யியலாளர்கள், இறையியலாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களால் ஆயிரம் ஆண்டுகளாக முன்மொழியப்பட்டு வந்துள்ளது. மெய்யியல் வரையறையில், இவ்விவாதம் அறிவாய்வியல் (இயற்கை, அறிவின் நோக்கம்) ஒழுங்குமுறைகள், உள்ளியம் (இருப்பின் இயற்கை, இருப்பு, உண்மை) என்பவற்றுடன் முதன்மையாக ஈடுபட்டதுடன், பெறுமதிக் கொள்கை, பூரணத்துவக் கருத்துக்கள் கடவுளின் கற்பிதங்களுடன் தொடர்புபட்டது. விவாத இருப்பின் பரந்த வகைகள் மீவியற்பியல், ஏரணம், அனுபவ அறிவு, உள்ளுணர்வுச் சார்பு என வகைப்படுத்தலாம். கடவுளின் இருப்பு மெய்யியல் உற்சாகமாக விவாதத்தில்,[1] சமய மெய்யியலில், பரவலர் பண்பாட்டில் விடயப் பொருளாகவுள்ளது.

மேற்கத்தைய மரபு மெய்யியலின் கடவுளின் இருப்பு பற்றிய உரையாடல் பிளேட்டோ, அரிசுட்டாட்டில் ஆகியோரினால் ஆரம்பமாகியது. இவர்கள் ஆரம்பித்த விவாதமானது தற்போது அண்டவியல் தொடர்பானதாக பகுப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் இருப்பு பற்றிய ஏனைய விவாதங்கள் முதலாவது உள்ளியம் பற்றிய விவாதத்தை உருவாக்கியவரான புனித அன்ஸ்லம், அண்டவியல் விவாதம் பற்றி (முறையே கலாம் விவாதம் மற்றும் முதலாவது வழி) தங்கள் சொந்த வெளியீட்டை அறிமுகப்படுத்திய இப்னு றுஷ்து மற்றும் தாமஸ் அக்குவைனஸ், அர்த்தமுடைய புலனுணர்வின் அத்தாட்சிக்கு இரக்கமுள்ள கடவுளின் இருப்பு ஏரணத்தின்படி தேவையாகும் என்ற ரெனே டேக்கார்ட், நல்லதின் இருப்பிலிருந்து கடவுளின் இருப்பினைப் பகுத்தறியலாம் என்ற இம்மானுவேல் கண்ட் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. கடவுளின் இருப்புக்கு மாற்றுக் கருத்து வைத்த சிநதனையாளர்களாக டேவிட் கியூம், இம்மானுவேல் கண்ட், பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் ஆகியோரைக் குறிப்பிடலாம். தற்கால பண்பாட்டில், கடவுளின் இருப்பு பற்றிய கேள்வி அறிவியலாளர்களான ஸ்டீபன் ஹோக்கிங், பிரான்சிஸ் கொலின்ஸ், ரிச்சர்ட் டாக்கின்சு, ஜோன் லெனொக்ஸ் ஆகியோராலும் மெய்யியலாளர்களான ரிச்சட் சுவின்புரூன், அல்வின் பிளான்டிங்கா, வில்லியம் லான் கிரேக், டானியல் டெனற், எட்வட் பெசர், டேவிட் பென்ட்லி காட் ஆகியோராலும் உரையாடப்பட்டுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. See e.g. The Rationality of Theism quoting Quentin Smith "God is not 'dead' in academia; it returned to life in the late 1960s". They cite "the shift from hostility towards theism in Paul Edwards's Encyclopedia of Philosophy (1967) to sympathy towards theism in the more recent Routledge Encyclopedia of Philosophy

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுளின்_இருப்பு&oldid=3662464" இலிருந்து மீள்விக்கப்பட்டது