iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/கசக்குகள்
கசக்குகள் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கசக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசக்குகள்
மொத்த மக்கள்தொகை
15 million
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 கசக்கஸ்தான்11,244,547 (2014)[1]
 சீனா1,500,000[2]
 உஸ்பெகிஸ்தான்1,100,000[3]
 உருசியா647,732[4]
 மங்கோலியா101,526
 துருக்மெனிஸ்தான்40,000[5]
 கிர்கிசுத்தான்33,200[6]
 செருமனி46,633[7]
 துருக்கி10,000[8]
 ஈரான்3,000 - 4,000 to 15,000[9][10]
 உக்ரைன்5,526[11]
 ஐக்கிய அரபு அமீரகம்5,000[12]
 செக் குடியரசு4,821[13]
 ஆஸ்திரியா1,685[14]
 பெலருஸ்1,355[15]
மொழி(கள்)
கசக் மொழி
சமயங்கள்
இசுலாம், தெங்கிரி மதம்,[4][16][17][18][19] கிறிஸ்தவம்

கசக்குகள் என்பவர்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஓர் துருக்கிய இனக்குழுவினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் கசக்கஸ்தானில் வசிக்கின்றனர். இவர்கள் மேலும் வடக்கு உசுபெக்கிசுத்தானின் சில பகுதிகள் மற்றும் உருசியாவின் எல்லைப் பகுதிகள், அத்துடன் வடமேற்கு சீனா (குறிப்பாக இலி கசாக் தன்னாட்சி மாகாணம்) மற்றும் மேற்கு மங்கோலியா (பயான்-உல்கி மாகாணம்) உள்ளிட்ட பல நாடுகளிலும் காணப்படுகிறார்கள். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் துருக்கிய மற்றும் மங்கோலிய வம்சாவளியைச் சேர்ந்த பழங்குடியினரின் இணைப்பில் இருந்து கசக்குகள் உருவாயினர்.[20][21][22][23][24][25]

கசக்குகளுக்கென ஓர் தனி அடையாளம் பெரும்பாலும் 1456 மற்றும் 1465 க்கு இடையில் கசக் கானரசு ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டம் பிரிந்ததை தொடர்ந்து, சானிபெக் மற்றும் கெரே அரசர்களின் ஆட்சியின் கீழ் பல பழங்குடியினர் அபுல்-கானரசிலிருந்து வெளியேறி கசக் கானரசை உருவாக்கினர்.

கசக் என்ற சொல் கசாக் இனத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் கசகஸ்தானி என்ற சொல் இன வேறுபாடின்றி கசகஸ்தானின் அனைத்து குடிமக்களையும் குறிக்கிறது.[26][27]

சொற்பிறப்பியல்

[தொகு]

வரலாற்றின் அடிப்படையில், கசக் மக்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் கசக் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். கசக் என்ற வார்த்தையின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. இது துருக்கிய வினைச்சொல்லான கஸ் (அலைந்து திரிபவர், கொள்ளையடிப்பவர், போர்வீரர், சுதந்திரமானவர் என பல அர்த்தங்கள் கொண்டது) என்பதிலிருந்து வந்தது என்று சிலர் ஊகிக்கிறார்கள். மேலம் சிலர் இது துருக்கிய வார்த்தையான கசாக் என்பதிலிருந்து பெறப்பட்டதாக கருதுகின்றனர். கசாக் என்பது யூர்ட்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஒரு சக்கர வண்டியாகும். கசக் என்ற வார்த்தையின் தோற்றம் பற்றிய மற்றொரு கோட்பாடு இது பண்டைய துருக்கிய வார்த்தையான கசகக் என்பதிலிருந்து வந்தது எனக் கூறுகிறது. இது எட்டாம் நூற்றாண்டின் துருக்கிய நினைவுச்சின்னமான உயுக்-துரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.[28]

வரலாறு

[தொகு]

பண்டைய வரலாற்றில் கசகசுதான் பல நாடோடி சமூகங்களின் பிறப்பிடம் மற்றும் தாயகமாக இருந்தது. தங்க நாடோடிக் கூட்டம் பிரிந்ததை தொடர்ந்து, சானிபெக் மற்றும் கெரே அரசர்களின் ஆட்சியின் கீழ் பல பழங்குடியினர் அபுல்-கானரசிலிருந்து வெளியேறி கசக் கானரசை உருவாக்கினர். 1456 மற்றும் 1465 க்கு இடையில் கசக் கானரசு ஆட்சி உருவாக்கப்பட்டது.[29]

துருக்கிய மக்களின் தோற்றம் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை. அவர்களின் தாயகம் தெற்கு சைபீரியாவில் அல்லது மங்கோலியாவில் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மத்திய ஆசியாவில் குடியேறிய ஆரம்பகால துருக்கிய மக்கள் பண்டைய வடகிழக்கு ஆசியர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர்.[30][31] பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடக்கு மத்திய ஆசியாவின் துருக்கிய மொழி பேசும் ஆயர் நாடோடி குழுக்களின் கூட்டமைப்பிலிருந்து கசக் இன மொழியியல் குழு உருவானது. கசக் மக்கள் வடக்கு மத்திய ஆசியா மற்றும் தெற்கு சைபீரியாவில் ஒரு பெரிய நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.[32]

கசக் மக்கள் (சி.1910)

மொழி

[தொகு]

கசக் மக்கள் பேசும் பெரும்பான்மை மொழியான கசக் மொழி துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.[33]

கலாச்சாரம்

[தொகு]

பாரம்பரிய கசக் உணவுகள் ஆடு மற்றும் குதிரை இறைச்சி மற்றும் பல்வேறு பால் பொருட்கள் ஆகியவற்றைச் பயன்படுத்துகின்றன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, கசக் மக்கள் செம்மறி ஆடுகள், பாக்டிரியன் ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளை வளர்த்து, போக்குவரத்து, உடை மற்றும் உணவுக்காக இந்த விலங்குகளை பயன்படுத்தினர். பெரும்பாலான கசக் சமையல் நுட்பங்கள் உணவை நீண்டகாலம் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பாரம்பரிய கசக் ஆடைகள் பெரும்பாலும் பிராந்தியத்தின் தீவிர காலநிலை மற்றும் கிராமப்புற நாடோடி வாழ்க்கை முறைக்கு ஏற்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.[34] இது பொதுவாக பறவைக் அலகுகள், விலங்குகளின் கொம்புகள், குளம்புகள் மற்றும் கால்களால் செய்யப்பட்ட விரிவான ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது.[35] சமகால கசக் மக்கள் பொதுவாக மேற்கத்திய ஆடைகளை அணிந்தாலும், அவர்கள் விடுமுறை மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு பாரம்பரிய ஆடைகளை அணிவார்கள்.[36]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Агентство Республики Казахстан по статистике. Этнодемографический сборник Республики Казахстан 2014". Archived from the original on 2017-11-08. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
  2. Census 2000 counts 1.25 mln Kazakhs The Kazak Ethnic Group, later the Kazakh population had higher birth rate, but some assimilation processes were present too. Estimatians made after the 2000 Census claim Kazakh population share growth (was 0.104% in 2000), but even if this share value was preserved at 0.104% level it would be no less than 1.4 mln in 2008
  3. Kazakh population share was constant at 4.1% in 1959–1989, CIA estimates பரணிடப்பட்டது 2016-07-09 at the வந்தவழி இயந்திரம் this share declined to 3% in 1996. Official Uzbekistan estimation (E. Yu. Sadovskaya "Migration in Kazakhstan in the beginning of the 21st century: main tendentions and perspectives" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9965-593-01-7) in 1999 was 940,600 Kazakhs or 3.8% of total population. If Kazakh population share was stable at about 4.1% (not taking into account the massive repatriation of ethnic Kazakhs (Oralman) to Kazakhstan) and the Uzbekistan population in the middle of 2008 was 27.3 mln, the Kazakh population would be 1.1 mln. Using the CIA estimate of the share of Kazakhs (3%), the total Kazakh population in Uzbekistan would be 0.8 mln
  4. 4.0 4.1 "Russia National Census 2010". Archived from the original on 2021-12-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
  5. In 1995 Kazakh population was 86,987 [1] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் or 1.94% population total. Later was a massive pepartriation of ethnic Kazakh population (oralman) to Kazakhstan: 22,000 before 2001 and 38,000–40,000 in 2001—2007. Press reports are claiming [2] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம்,[3] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம்,[4] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் the most part of Kazakhs had left Turkmenistan
  6. In 2009 National Statistical Committee of Kyrgyzstan. National Census 2009 பரணிடப்பட்டது 2011-09-20 at the வந்தவழி இயந்திரம்
  7. "Anzahl der Ausländer in Deutschland nach Herkunftsland (Stand: 31. Dezember 2014)".
  8. "Казахское общество Турции готово стать объединительным мостом в крепнущей дружбе двух братских народов - лидер общины Камиль Джезер". பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  9. "Êàçàõè "ÿäåðíîãî" Èðàíà". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  10. ""Казахи доказали, что являются неотъемлемой частью иранского общества и могут служить одним из мостов, связующих две страны" - представитель диаспоры Тойжан Бабык". பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  11. Ukrainian population census 2001: Distribution of population by nationality. Retrieved on 23 April 2009 பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்
  12. "UAE´s population – by nationality". BQ Magazine. 12 April 2015. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
  13. "Number of foreigners". Czech Statistical Office. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
  14. Statistik Austria. "STATISTIK AUSTRIA - Bevölkerung nach Staatsangehörigkeit und Geburtsland". பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  15. population census 2009 பரணிடப்பட்டது 2012-04-04 at the வந்தவழி இயந்திரம்: National composition of the population.
  16. "The Kazak Ethnic Group". பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  17. "Kazakhstan population census 2009". Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
  18. "Religion and expressive culture – Kazakhs". Everyculture.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2012.
  19. "Chapter 1: Religious Affiliation". The World’s Muslims: Unity and Diversity. Pew Research Center's Religion & Public Life Project. August 9, 2012. Retrieved 4 September 2013
  20. Lee, Joo-Yup (2018). "Some remarks on the Turkicisation of the Mongols in post-Mongol Central Asia and the Qipchaq Steppe". Acta Orientalia Academiae Scientiarum Hungaricae 71 (2): 121–144. doi:10.1556/062.2018.71.2.1. https://akjournals.com/view/journals/062/71/2/article-p121.xml. 
  21. "Kazakh | People, Religion, Language, & Culture | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2023-11-10. பார்க்கப்பட்ட நாள் 2023-11-11.
  22. Zhabagin, M.; Sabitov, Z.; Tarlykov, P.; Tazhigulova, I.; Junissova, Z.; Yerezhepov, D.; Akilzhanov, R.; Zholdybayeva, E. et al. (2020). "The medieval Mongolian roots of Y-chromosomal lineages from South Kazakhstan". BMC Genetics 21 (Suppl 1): 87. doi:10.1186/s12863-020-00897-5. பப்மெட்:33092538. 
  23. Sabitov, Zhaxylyk M.; Batbayar, Kherlen. "The Genetic Origin of the Turko-Mongols and Review of the Genetic Legacy of the Mongols. Part 1: The Y-chromosome Lineages of Chinggis Khan the Russian Journal of Genetic Genealogy. Volume 4, No 2 (2012)/Volume 5, No 1 (2013). P. 1-8". academia.edu.
  24. Sabitov, Zhaxylyk M. "The Kazakhstan DNA projecthits first hundred Y-profilesfor ethnic Kazakhs". academia.edu.
  25. Lee, Joo-Yup (2019-04-26), The Kazakh Khanate (in ஆங்கிலம்), எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acrefore/9780190277727.013.60, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-027772-7, பார்க்கப்பட்ட நாள் 2023-11-11 {{citation}}: Check |url= value (help)
  26. Kolsto, Pal (January 1998). "Anticipating Demographic Superiority: Kazakh Thinking on Integration and Nation". Europe-Asia Studies 50 (1): 51–69. doi:10.1080/09668139808412523. பப்மெட்:12348666. https://www.jstor.org/stable/153405. பார்த்த நாள்: 13 April 2021. 
  27. Buri, Tabea (2016). "Urbanisation and Changing Kazakh Ethnic Subjectivities in Gansu, China". Inner Asia 18 (1): 79–96 (87). doi:10.1163/22105018-12340054. https://www.jstor.org/stable/44645086. பார்த்த நாள்: 13 April 2021. 
  28. Уюк-Туран [Uyuk-Turan] (in ரஷியன்). Archived from the original on 5 February 2006.
  29. Pultar, Gönül (14 April 2014). Imagined Identities: Identity Formation in the Age of Globalization (in ஆங்கிலம்). Syracuse University Press. p. 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-3342-6. Archived from the original on 13 February 2023. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
  30. Lee, Joo-Yup; Kuang, Shuntu (2017-10-18). "A Comparative Analysis of Chinese Historical Sources and y-dna Studies with Regard to the Early and Medieval Turkic Peoples". Inner Asia 19 (2): 197–239. doi:10.1163/22105018-12340089. பன்னாட்டுத் தர தொடர் எண்:2210-5018. https://brill.com/view/journals/inas/19/2/article-p197_197.xml. பார்த்த நாள்: 21 December 2022. "Finally, an extensive study of the genetic legacy of the Turkic nomads across Eurasia based on autosomal dna analysis reveals that the source populations for the Turkic nomads who spread ‘Asian genes’ to non-Turkic peoples were (the ancestors of modern-day) Tuvinians, Mongols and Buryats, despite the fact that the latter two are Mongolic (Yunusbayev et al. 2015).81 In sum, one should note that the early eastern Turkic peoples were in all likelihood genetically closer to their neighbouring Mongolic peoples than to various later Turkic peoples of central and western Eurasia.". 
  31. Yang, Xiao-Min; Meng, Hai-Liang; Zhang, Jian-Lin; Yu, Yao; Allen, Edward; Xia, Zi-Yang; Zhu, Kong-Yang; Du, Pan-Xin et al. (2023-01-17). "Ancient genome of Empress Ashina reveals the Northeast Asian origin of Göktürk Khanate" (in en). Journal of Systematics and Evolution 61 (6): 1056–1064. doi:10.1111/jse.12938. பன்னாட்டுத் தர தொடர் எண்:1674-4918. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/jse.12938. "The early Medieval Türk (earlyMed_Turk) derived the major ancestry from ANA at a proportion of 62.2%, the remainder from BMAC (10.7%) and Western Steppe Afanasievo nomad (27.1%) (Figs. 1C, 1D; Table S2E). The geographically remote Central Steppe Türk (Kyrgyzstan_Turk and Kazakhstan_Turk) could be modeled as an admixture of ANA (Mongolia_N_-North), BMAC, and West Steppe pastoralists (Afanasievo (P=0.0196) (Fig. S5; Table S2E).". 
  32. "Kazakh | People, Religion, Language, & Culture | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Archived from the original on 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  33. "Kazakh". Center for Languages of the Central Asian Region (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  34. [5] Fergus, Michael and Jandosova, Janar, "Kazakhstan: Coming of Age," Stacey International, 2003, page 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1900988612
  35. "Loading site please wait..." www.kazakhembus.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  36. [6] Waters, Bella "Kazakhstan in Pictures," Twenty First Century Books; 2nd edition, 2007, page 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0822565888
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசக்குகள்&oldid=3928444" இலிருந்து மீள்விக்கப்பட்டது