iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/ஓருறுப்புமாறி
ஓருறுப்புமாறி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஓருறுப்புமாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் ஓருறுப்புமாறி (Univariate) என்பது ஒரே ஒரு மாறியைக் கொண்ட சமன்பாடு, கோவை, சார்பு அல்லது பல்லுறுப்புக் கோவை எனப் பொருள்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை உள்ளடக்கிய வகையினை பல்லுறுப்புமாறி என வரையறுக்கலாம். ஓருறுப்புமாறி மற்றும் பல்லூறுப்புமாறிகளை வேறுபடுத்தி அறிவது அவசியமானதும் அடிப்படையானதும் ஆகும். எடுத்துக்காட்டாக, இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் மற்றும் யூக்ளிடியன் பல்லுறுப்பு கோவையின் நெறிமுறைகள் ஆகியவை ஓருறுப்பு மாறியைக் கொண்டதாக அமைகின்றன. இதை பல்லுறுப்புமாறிகளுக்கு பொதுமைப்படுத்த இயலாது.


ஓருறுப்புமாறி என்ற கருத்து புள்ளியியலில் ஓருறுப்பு பரவல் மற்றும் பல்லுறுப்பு பரவல் என்ற வகையில் வேறுபடுத்தி பயன்படுத்தப்படுகிறது. ஓருறுப்பு தரவு என்பது ஒத்த அளவன் பகுதியாகும். காலத்தொடர் பகுப்பாய்வியலில், இது ஒட்டுமொத்த காலத்தொடரில் ஓருறுப்புக் காலத்தொடர் ஒத்த காலஅளவுகளின் தொகுப்பாக கருதப்படுகிறது. பல்லுறுப்புமாறி காலத்தொடர் என்பது வெவ்வேறு மதிப்புகளை வெவ்வேறு காலஅளவில் பெறுகின்றன. சில நேரங்களில் ஓருறுப்பு மாறி, பல்லுறுப்புமாறிகளைப் பயன்படுத்துவதில் குழப்பங்கள் நிலவுகின்றன.

ஓருறுப்புமாறி புள்ளியியலில் அளவுக்குறிப்பீடு தவிர, ஒரு மாறியின் வரன்முறையைப் பின்வரும் இருப்புநிலை, வேறுபடுதல் எனும் இரு முதன்மை அளவுகளால்(அல்லது அளவுருபன்கள் அல்லது சாரப் பருமைகள்) விவரிக்கப்படுகின்றது.[1]

  • இருப்புநில்லைசார் அளவுகள் (e.g. முறைமை(mode), நடுவம்(median) எண்னியல் நிரல்(mean) எந்த பகுதியில்தரவுகள் மையப்படுத்தப்படுகின்றன என்பதை விவரிக்கின்றன.
  • வேறுபடுதலின் அளவுகள் ( எ.கா. கண்(span), கால்வட்டத்திடை தொலைவு, செந்தர விலக்கம்) தரவுகள் எப்படி ஒத்தபடியும் வேறுபட்டபடியும் சிதறுகின்றன என்பதை விவரிக்கிறது.

மேலும் காண்க

[தொகு]
  • ஓருறுப்புமாறி பகுப்பாய்வு
  • ஓருறுப்புமாறி இருமைப் படிமம்
  • ஓருறுப்புமாறி பரவல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Grünwald, Robert. "Univariate Statistik in SPSS". novustat.com (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓருறுப்புமாறி&oldid=3724983" இலிருந்து மீள்விக்கப்பட்டது