iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/எட்டா_(விடுதலை_அமைப்பு)
எட்டா (விடுதலை அமைப்பு) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டா (விடுதலை அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம்
Euskadi Ta Askatasuna
தொடக்கம் 1959 சூலை 31
நாடு எசுப்பானியா, பிரான்சு
கிளை கட்டுரையைப் பார்க்க
புனைபெயர் ETA
குறிக்கோள் பாஸ்க் தேசியம்
போர்கள் பாஸ்க் மோதல்
கட்டளைத் தளபதிகள்
Current
commander
ஜோசு உர்ருட்டிகோடெக்ச
டேவிட் ப்லா மரின்
இராடிக்ஸ் சோசபால்
இசஸ்குன் லெசிகா
மைக்கெல் இஸ்டராரஸ்

இடிஏ (ETA விரிவு Euskadi Ta Askatasuna (பொருள்; தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம் "Basque Homeland and Liberty"),[1] என்பது ஒரு முன்னாள் ஆயுதமேந்திய இடதுசாரி பாஸ்க் தேசிய மற்றும் விடுதலை அமைப்பாகும். இவர்களின் தாயகம் பாசுக்கு நாடு (வடக்கு ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சு). 1959 ஆம் ஆண்டில் இந்த குழு நிறுவப்பட்டது, பாசுக் மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்க தனிநாடு வேண்டி எசுபானியாவின் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு பாசுக்கு நாட்டுப் பகுதியில் குண்டுவீச்சு, கொலை, கடத்தல், வன்முறை போன்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஆயுதக் குழுவாக உருவானது.[2][3] பாசுக்கு தேசிய விடுதலை இயக்கத்தின் பிரதான குழுவாக இடிஏ உள்ளது மேலும் பாசுக் போராட்டத்தின் மிக முக்கியமான செயற்பாட்டாளராகவும் உள்ளது.

1968 மற்றும் 2010 இடையில், இவர்களால் 820 பேர் கொல்லப்பட்டனர் (340 பொதுமக்கள் உட்பட) மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காமுற்றுள்ளனர்.[4][5][6][7] ஸ்பெயின், பிரான்ஸ்,[8] ஐக்கிய இராச்சியம்,[9] ஐக்கிய மாநிலங்கள்,[10] ஐரோப்பிய ஒன்றியம்.[11] ஆகியவற்றால் இடிஏவை பயங்கரவாதக் குழு என முத்திரைக் குத்தியுள்ளன. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் இந்தக் குழுவை "பயங்கரவாதிகள்" என்று குறிக்கின்றன.[12][13][14][15] ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட இதன் உறுப்பினர்கள் சிறைகளில் உள்ளனர்.[16]

இடிஏ 1989, 1996, 1998 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் போர்நிறுத்தங்களை அறிவித்தது. 2010 செப்டம்பர் 5, அன்று, இடிஏ புதியதாக போர்நிறுத்தத்தை அறிவித்தது, [17] அது இன்னும் நடைமுறையில் உள்ளது, மேலும் 2011 அக்டோபர் 20 அன்று, இடிஏ தன் "ஆயுத செயற்பாடுகளின் நிறுத்தத்தை உறுதிபடுத்தி" அறிவித்தது.[18] 2012 நவம்பர் 24 இல், குழுவைக் கலைக்கவும் அதன் நடவடிக்கைகளை நிறுத்தவும் ஒரு "உறுதியான முடிவுக்குவர" பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என அறிவித்தது.[19] 2017 ஏப்பிரல் 7 ஆம் திகதி இந்தக் குழுவானது தன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்ததுடன், அடுத்த நாளிளில் இருந்து அதிகாரப்பூர்வமாக நிராயுதபாணியான அமைப்பாகவும் அறிவித்தது.[20]

வரலாறு

[தொகு]

1938 ஆண்டு ஸ்பெயினின் ஆட்சியை சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோ கைப்பற்றிய பிறகு பாஸ்க் மொழி தடை செய்யப்பட்டது. எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டன. இந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக பாஸ்க் தேசியக்கட்சி ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் சனநாயக வழிப்போராட்டங்களால் எவ்வித நன்மையும் கிடைக்காததை உணர்ந்து, பாஸ்க் தேசியக்கட்சியின் மாணவர் அமைப்பானது ஆயுதப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்து உருவாக்கிய அமைப்பு தான் இடிஏ போராளி அமைப்பு.

இடிஏ அமைப்பு வெறும் தேசியவாதக் கண்ணோட்டத்துடன் மட்டுமில்லாமல் பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய கண்ணோட்டத்தோடும் நடத்தியது. தொடர் தாக்குதலை இடிஏ நடத்தத் தொடங்கி இறுதியில் சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோவின் அரசியல் வாரிசான பிளாஸ்கோவை குண்டு வைத்து கொலை செய்து சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். 1978 இல் ஸ்பெயினில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்து சனநாயக நாடாளுமன்ற முறை நிறுவப்பட்டு பாஸ்க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஸ்பெயினின் மத்திய பாராளுமன்றமே அதிகாரம் கொண்டதாக இருந்தது என்ற குறை நிலவியது. எனவே பல கட்டப் பேச்சு வார்த்தைப் பிறகு மீண்டும் இடிஏ ஆயுதப் போரட்டத்தை தொடங்கியது.[21]

அமெரிக்காவில் 2001 செப்டம்பரில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு உலகின் போக்கு மாறத் துவங்கியது ஆயுதந்தாங்கிய போராளி இயக்கங்களின் நியாயங்கள் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அனைத்து இயக்கங்களும் பொத்தாம்பொதுவாக ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டன. இதனால் இடிஏவின் ஆயுதப் போராட்டம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. இடிஏவின் போராட்டத்திற்கு முதலில் ஆதரவாக இருந்த பிரான்சு பிறகு ஸ்பெயினுடன் இணைந்துகொண்டு பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தது. மேலும் இடிஏவின் 40 ஆண்டு கால தொடர் ஆயுதப் போராட்டம், அம்மக்களையே சோர்வடைய வைத்து விட்டது. நாடுகளும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் கைதிகளை அந்நாட்டிடம் ஒப்படைக்கத் தொடங்கின. இதனால் இடிஏவின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, அரசியல் ரீதியாக இயக்கம் பலவீனமடையத் தொடங்கியது. இதனால் போராட்டத்தில் தோற்பதைவிட பின்வாங்குவதே சிறந்தது என்று இடிஏ வேறு வழியின்றி தன் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டது.[22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ETA BASQUE ORGANIZATION, Encyclopaedia Britannica 20 October 2011
  2. (எசுப்பானியம்) Goiz Argi பரணிடப்பட்டது 2019-01-15 at the வந்தவழி இயந்திரம். Goiz Argi. Retrieved on 30 January 2011.
  3. (எசுப்பானியம்) Goiz Argi பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். Goiz Argi (27 January 2002). Retrieved on 30 January 2011.
  4. "Lista de víctimas mortales". Ministerio del Interior (in Spanish). Archived from the original on 15 September 2010. பார்க்கப்பட்ட நாள் 19 September 2010. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  5. "Datos significativos del conflicto vasco, 1968–2003". Eusko News (in Spanish). 2003. பார்க்கப்பட்ட நாள் 19 January 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. ETA has killed 829 people as of 19 January 2011 பரணிடப்பட்டது 15 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம், Spanish Ministerio del Interior
  7. Peace at Last? | People & Places|Smithsonian Magazine. Smithsonianmag.com. Retrieved on 30 January 2011.
  8. (பிரெஞ்சு) French list of terrorist organizations, in the annex of Chapter XIV பரணிடப்பட்டது 25 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  9. "Terrorism Act 2000". Schedule 2, Act இல. 11 of 2000.
  10. Foreign Terrorist Organizations (FTOs). Retrieved on 16 April 2013.
  11. http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=OJ:L:2011:028:0057:01:EN:HTML பரணிடப்பட்டது 2011-11-22 at the வந்தவழி இயந்திரம் EU's list of terrorist organizations
  12. "Eta gives terrorists disguise manual". The Independent (London). 15 December 2007. https://www.independent.co.uk/news/world/europe/eta-gives-terrorists-disguise-manual-765286.html. பார்த்த நாள்: 27 March 2010. 
  13. Owen, Edward (7 August 2007). "Eta terrorists demand protection money". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/news/uknews/1559677/Eta-terrorists-demand-protection-money.html. பார்த்த நாள்: 27 March 2010. 
  14. Spain's rail ambitions: Ave Madrid. The Economist (5 February 2009). Retrieved on 30 January 2011.
  15. Spanien: Mutmaßliche Eta-Terroristen gefasst – SPIEGEL ONLINE – Nachrichten – Politik. Spiegel.de (2 July 2007). Retrieved on 30 January 2011.
  16. "Etxerat cifra en 373 el número de presos de ETA que cumplen condena en 70 cárceles". El Correo. 30 July 2016. http://www.elcorreo.com/bizkaia/politica/201607/30/etxerat-cifra-numero-presos-20160730121652.html. பார்த்த நாள்: 4 January 2017. 
  17. "Basque separatist group Eta 'declares ceasefire'". BBC News. 5 September 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  18. "Basque group Eta says armed campaign is over". BBC News. 20 October 2011. http://www.bbc.co.uk/news/world-europe-15393014. பார்த்த நாள்: 20 October 2011. 
  19. "Basque separatists Eta 'ready to disband'". BBC.
  20. "Eta: Basque separatists plan to unilaterally disarm on Saturday". BBC News. 7 April 2017. http://www.bbc.com/news/world-europe-39512637. பார்த்த நாள்: 7 April 2017. 
  21. க. இரா. தமிழரசன் (20 நவம்பர் 2017). "கட்டலோனியாவும் தமிழகமும் - 5". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2017.
  22. க.இரா.தமிழரசன் (23 நவம்பர் 2017). "கட்டலோனியாவும் தமிழகம் - 6". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டா_(விடுதலை_அமைப்பு)&oldid=3334065" இலிருந்து மீள்விக்கப்பட்டது