iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/இலோ_ஆன்-சோ
இலோ ஆன்-சோ - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

இலோ ஆன்-சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலோ ஆன்-சோ ( Lo Hon-cho ) அல்லது இலோ ஆன்சோ ( Lo Honcho ) 20 ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட சீனக் கடற் கொள்ளைக்காரி ஆவார். இலோ ஒரு சக்திவாய்ந்த கடற்கொள்ளைக்கூட்டத் தலைவனை மணந்ததினால் 1921 இல் தனது கணவர் இறந்த பிறகு அவரது கடற்படைக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையின் கீழ், கடற்படை 64 கப்பல்களை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. இலோ தென் சீனாவில், பெய்ஹாய்க்கு அருகாமையில் கொள்ளையிட்டார். மேலும் இவரது இரக்கமற்ற தன்மையின் காரணமாக ஒரு பயங்கரமான பெயரைப் பெற்றார். அக்டோபர் 1922 இல் சீன இராணுவத்தால் இவர் கைது செய்யப்பட்டபோது இவரது வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது.

சுயசரிதை

[தொகு]

இலோ ஆன்-சோ ஒரு சக்திவாய்ந்த கடற்கொள்ளையாளரை மணந்தார். 1921 இல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, இவர் முன்னோடி சீனப் பெண் கடற்கொள்ளைக் கூட்டத் தலைவி செங் யி சாவ் (1775-1844) போலவே தனது சொந்தக் கடற்படைக்கு தலைமை தாங்கினார்.[1][2] அந்த நேரத்தில் இவரது வயது குறைந்தபட்சம் 20களின் நடுப்பகுதியில் இருந்திருக்கலாம்.[3] இலோ இறுதியில் 64 கப்பல்களைக் கொண்டிருந்தார்.[3][4] இது இவரது கணவர் வழிநடத்தியதை விட அதிக எண்ணிக்கையாகும்.[3][4] இவர் தெற்கு சீனாவில் உள்ள கிராமப்புறங்களில் கொள்ளையில் ஈடுபட்டார். பெரும்பாலும் பெய்ஹாய்க்கு அருகில் செயல்பட்டார்.[1][5]

இவர் இளமையானவராகவும், அழகானராகவும் மற்றும் இரக்கமற்றவராகவும் விவரிக்கப்பகிறார்.[1] 1922 இல் வெளியான ஒரு செய்தி அறிக்கை இவரை "சீனாவின் அனைத்து வகையான திருட்டுக் கூட்டங்களிலும் மிகவும் கொலைகார மற்றும் இரக்கமற்றவர்" என்று விவரிக்கிறது. [3] இவரால் கொள்ளையடிக்கப்பட்ட கிராமங்களிலுள்ள, 50 அல்லது 60 பெண்கள் வரை பெரும்பாலும் பாலியல் தொழிலுக்கு விற்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.[1][6]

சீன் ராணுவத்திற்கு உதவியது

[தொகு]

1920 களின் முற்பகுதியில் நடந்த கிளர்ச்சிகளில் சிலகாலம் சீன இராணுவத்துடன் இணைந்து இவர் சிலகாலம் போரிட்டார். [7] தளபதி வோங் மின்-டோங்குடன் இணைந்து பணியாற்றினார்.[1][3] வோங் மின்-டோங், சில ஆதாரங்களில் ஒரு பெண் என்றும் விவரிக்கப்படுகிறார். அவர் 50 கப்பல்களுக்கு கட்டளையிட்டார்.[8] பெய்ஹாய் நகரம் சூறையாடப்படுவதைத் தடுக்க, இலோ மற்றும் வோங் இருவரும் சேர்ந்து மீட்புப் பணம் பெற்றுக் கொண்டனர்.[3] இலோ சீன இராணுவத்தில் கர்னல் பதவியைப் பெற்றார். [1] [3] ஒரு கடற்கொள்ளையருக்கான ஒப்பீட்டளவில் இது தனித்துவமான வேறுபாடு. [7] வோங் சிறிது காலத்திற்குப் பிறகு குவாங்சௌ சென்றார். அதன் பிறகு இலோ மீண்டும் கடற்கொள்ளைக்குத் திரும்பினார். [3]

கைது நடவடிக்கை

[தொகு]

இலோவின் வாழ்க்கை அக்டோபர் 1922 இல் திடீரென முடிவுக்கு வந்தது.[1] ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே கடற்கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவராக இருந்தார். [8] இலோ ஒரு கடலோர கிராமத்தில் தங்கியிருக்கும்போது சீன போர்க்கப்பலால் வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் இலோ என்ன ஆனார் என்பது பற்றி தெரியவில்லை.[3] இவர் கொல்லப்பட்டிருக்கலாம்.[4] எழுத்தாளர் இரிச்சர்ட் கார்டன் மெக்லோசுகியின் கூற்றுப்படி, 1930 களில் தெற்கு சீனாவிற்கு சென்றபோது உள்ளூர் மக்களிடம் பேசிய அவர், இலோ ஆன்-சோ "ஒரு கடற் கொள்ளையில் கொல்லப்பட்டார்" என்று கூறியதாகத் தெரிவித்தார்.[7]

பிற்கால வாழ்க்கை

[தொகு]

சீனாவிற்கு வெளியே கிடைக்கக்கூடிய மிகக் குறைவான ஆதாரங்களினால் இலோவின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. இவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் குவாங்சோவில் ஆங்கில மொழி அறிக்கையை வெளியிட்டதன் மூலமே சர்வதேச அளவில் அறியப்பட்டார். சீன மொழி ஆதாரங்களின் அடிப்படையில் இவரைப் பற்றிய எந்த ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை.[3] இலோவின் சுருக்கமான கடற் கொள்ளை வாழ்க்கையின் கதைகள் 1930 களிலிருந்து தெற்கு சீனாவில் வெளியாட்களுக்கு இன்றும் சொல்லப்பட்டு பகிரப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Gosse, Philip (2012). The History of Piracy (in ஆங்கிலம்). Courier Corporation. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-14146-6.
  2. Salmonson, Jessica Amanda (2015). "Hon-cho Lo". The Encyclopedia of Amazons: Women Warriors from Antiquity to the Modern Era (in ஆங்கிலம்). Open Road Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4532-9364-5.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 Stanley, Jo; Chambers, Anne; Murray, Dian H.; Wheelwright, Julie (1995). Bold in Her Breeches: Women Pirates Across the Ages (in ஆங்கிலம்). Pandora. pp. 243–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-04-440892-5.
  4. 4.0 4.1 4.2 Spinelli, Anna (2003). Tra l'inferno e il mare: breve storia economica e sociale della pirateria (in இத்தாலியன்). Fernandel Scientifica. pp. 218–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-87433-39-5.
  5. McCloskey, Richard Gordon (August 1947). "Answers". American Notes and Queries 7 (1): 74. https://archive.org/details/in.ernet.dli.2015.60590/page/n81/mode/2up?q=%22Hon-cho-lo%22. 
  6. "From Empire to Enlightenment". Women Our History (in ஆங்கிலம்). Dorling Kindersley Limited. 2022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-241-44438-2.
  7. 7.0 7.1 7.2 McCloskey, Richard Gordon (August 1947). "Answers". American Notes and Queries 7 (1): 74. https://archive.org/details/in.ernet.dli.2015.60590/page/n81/mode/2up?q=%22Hon-cho-lo%22. 
  8. 8.0 8.1 Zuidhoek, Arne (2022). The Pirate Encyclopedia: The Pirate's Way (in ஆங்கிலம்). BRILL. p. 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-51567-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோ_ஆன்-சோ&oldid=3898440" இலிருந்து மீள்விக்கப்பட்டது