iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/ஆலன்_பீன்
ஆலன் பீன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலன் பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன் பீன்
Alan Bean
நாசா விண்ணோடி
தேசியம்அமெரிக்கர்
பிறப்புஆலன் லாவர்ன் பீன்
(1932-03-15)மார்ச்சு 15, 1932
அமெரிக்கா, வீலர்
இறப்புமே 26, 2018(2018-05-26) (அகவை 86)
அமெரிக்கா ஹியூஸ்டன்
வேறு பணிகள்
கடற்படை அதிகாரி, சோதனை விமானி
பயின்ற கல்வி நிலையங்கள்
டெக்சாஸ் பல்கலை, B.S. 1955
தரம் Captain, USN
விண்வெளி நேரம்
69d 15h 45min
தெரிவு1963 NASA Group 3
3
மொத்த நடை நேரம்
10 மணிநேரம் 26 நிமிடங்கள்[1]
பயணங்கள்அப்பல்லோ 12, ஸ்கைலாப் 3
திட்டச் சின்னம்
ஓய்வுJune 1981
விருதுகள்

ஆலன் லாவர்ன் பீன் (Alan LaVern Bean, 15, மார்ச் 1932 –  26, மே 2018) என்பவர்  அமெரிக்க கடற்படை அதிகாரி மற்றும் சோதனை ஓட்ட  விமானி, வானூர்தி பொறியியலாளர், வான்வெளி பொறியாளர் மற்றும் நாசா விண்வெளி வீரர் ஆவார்; மேலும் இவர் சந்திரனில் நடந்த நான்காவது நபர் ஆவார். இவர் விண்வெளி வீரர் குழு 3 வின் வின்வெளி வீரராக 1963 இல் நாசாவால்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு முறை விண்வெளிக்குப் பயணம் செய்த ஆலன், முதல் விண்வெளி பயணத்தை அப்பல்லோ 12 இல் மேற்கோண்டவர்,   1969ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தன் 37 ஆம் வயதில் சந்திரனில் இறங்கி நடந்தார். இதன் மூலம் சந்திரனில் நடந்த 4வது விண்வெளி வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.சந்திரனில் 31 மணி நேரம் இருந்த இவர், அங்குள்ள பாறைகள், மண் போன்றவற்றை ஆய்வுக்காக சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தார்.[2] இவர் தனது இரண்டாவது மற்றும் இறுதி விண்வெளிப் பயணத்தை  1973 இல் ஸ்கைலேப் விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். 1975 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் இருந்தும் பின்னர், 1975 இல் நாசாவில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதன்பிறகு கேன்வாசில் ஓவியங்கள் வரைவதில் பெரும்பாலான நேரத்தை கழித்து வந்தார். இவர் தன் சொந்த அனுபவங்கள்,  விண்வெளி,  அப்பல்லோ திட்டத்தில் அவருடன் இருந்த சக விண்வெளி வீரர்கள் போன்றோரை வரைந்துள்ளார்.   அப்போலோ 12 இல் சென்ற குழுவில் கடைசியாக உயிர்வாழ்ந்தவர் இவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Joachim Becker. "Alan Bean - EVA experience".
  2. "உலகின் 4-வது விண்வெளி வீரராக நிலவில் இறங்கிய ஆலன் பீன் மரணம்". செய்தி. தி இந்து தமிழ். 28 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_பீன்&oldid=3576559" இலிருந்து மீள்விக்கப்பட்டது