BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: இன்று வாக்கு எண்ணிக்கை - நேரலை
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தேர்தல்களில் முன்னிலை பெற்றிருக்கும் பிரதானக் கட்சிகள் எவை?
அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்? - முழு விவரம்
உலக பணக்காரர்களில் முக்கியமான நபராக அறியப்படும் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
காணொளி, அநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?, கால அளவு 6,02
இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான போர்குற்ற விசாரணையின் நிலைமை என்னவாகும்? இதுகுறித்து புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கருத்து என்ன?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றால் என்ன? ஒருவரை கைது செய்ய முடியுமா? அமெரிக்கா ஏன் உறுப்பினராக இல்லை?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் அதிகாரம் கொண்ட சர்வதேச நீதிமன்றமாகும்.
நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 21ம் தேதி அன்று காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100 ரன்கள் வரை தாக்குபிடிக்குமா? - பதிலடி கொடுத்த பும்ரா படை
ஆஸ்திரேலிய அணி உடனான் முதல் பெர்த் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி. ஒரே நாளில் 17 விக்கெட் குவித்த வேகப்பந்து வீச்சாளர்கள்
யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன்? பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காதா?
பாகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளும் கோவில் யானைகள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான யானை முகாம்களில் உள்ள பயிற்சி பெற்ற கும்கி யானைகள், திடீரென பாகன்கள் மற்றும் பிறரை தாக்கிக் கொல்வது, அவ்வப்போது நடந்து வருகிறது.
தஞ்சை: பள்ளி வளாகத்துக்குள் கொல்லப்பட்ட ஆசிரியை - பணிப் பாதுகாப்பு சட்டம் கோரும் ஆசிரியர்கள்
தஞ்சையில் அரசுப் பள்ளி வளாகத்துக்குள் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதன்குமார் என்ற இளைஞரை புதன் கிழமையன்று போலீஸ் கைது செய்துள்ளது.
அதானி மீதான குற்றச்சாட்டுகள்: அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
உலகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு கடந்த வியாழன் மிகவும் கடினமான நாளாக இருந்தது. என்ன நடந்தது?
இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?
இந்தியாவும் பாகிஸ்தானும் அதிக எண்ணிக்கையில் ராணுவ ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) இருப்பை தங்கள் படையில் அதிகரித்து வருகின்றன. இரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளன. கூடவே விமானி இல்லாமலேயே எதிரியை கண்காணிப்பது, உளவு பார்ப்பது அல்லது இலக்குகளை குறிவைப்பது போன்ற திறன்கள் அடங்கிய இந்த தொழில்நுட்பத்தை தாங்களே உருவாக்கியும் உள்ளன.
விவாகரத்து செய்யாமலேயே தம்பதிகள் பிரிய முடியுமா? 'நீதிமன்ற மணப்பிரிவு' என்பது என்ன?
இந்திய சட்டங்களின் கீழ் திருமணமான தம்பதிகள், விவாகரத்து செய்யாமல், நீதிமன்ற உத்தரவின் மூலம் பிரிந்து இருக்க முடியும்.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை: அதிக வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி - ஓர் சுவாரஸ்ய வரலாறு
பார்டர்-கவாஸ்கர் கோப்பை: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் இந்த கோப்பையின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
சிறப்புப் பார்வை
டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றுள்ள விவேக் ராமசாமியின் தமிழ்நாட்டு பின்னணி என்ன? - உறவினர்கள் எங்கே உள்ளனர்?
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள டிரம்ப், 'அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை'என்ற முகமையை உருவாக்கி அதன் தலைமை பதவியில் ஈலோன் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி புதன் அன்று (நவம்பர் 20) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த மிகப்பெரிய வங்கி கொள்ளை - 53 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்
1971ம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது பிரிட்டனில் உள்ள பேக்கர் தெருவில் உள்ள லாய்ட்ஸ் வங்கியில் நடைபெற்ற கொள்ளையில் இதுவரை துப்பு துலங்காதது ஏன்?
புல்டோசர் நடவடிக்கைக்கு புதிய வழிகாட்டுதல்கள் - ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டடங்கள் பற்றிய வழக்குகள் என்ன ஆகும்?
புல்டோசர் மூலம் ஒருவரின் வீட்டையோ, அவருக்குச் சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிக்கும் முன் அரசு அல்லது நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்கள் முந்தைய வழக்குகளில் தாக்கம் செலுத்துமா?
குத்துச்சண்டை: மைக் டைசனை வென்ற முன்னாள் யூடியூபர் - சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்
உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். களத்தில் நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
"காதல், கல்யாணம், குழந்தை இனி கிடையாது' - டிரம்ப் வெற்றியால் ஆண்களையே புறக்கணிக்க சில பெண்கள் முடிவு ஏன்?
பல்வேறு நாடுகளில் பெண்களது உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவக்குத்துள்ளது. தென்கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது. இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களொடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் அமெரிக்கப் பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றனர்? இந்த இயக்கத்தின் எந்தெந்த நோக்கங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன?
ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை'
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது, அவரது தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது இயற்பெயர் குமாரசுவாமி. இவர் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்துச் சென்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல நாட்களுக்கு போர் செய்தார். இறுதியில், நவம்பர் 16, 1801ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார்.
டிரம்ப் அரசில் இடம் பிடித்துள்ள 'விவேக் ராமசாமி' யார்? அவரது செயல் திட்டம் என்ன?
ஈலோன் மஸ்க்கை "கிரேட் ஈலோன் மஸ்க்" (Great Elon Musk) மற்றும் விவேக் ராமசாமியை “தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்” (Patriotic American) என்றும் டிரம்ப் அழைத்தார். இந்த பொறுப்பு கிடைத்தவுடன், விவேக் ராமசாமி, “நாங்கள் மென்மையான போக்குடன் நடந்துகொள்ள போவதில்லை”, என்று எழுதியுள்ளார்.
இஸ்ரேல் - அரபு நாடுகள்: டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது மத்திய கிழக்கில் யாருக்கு சாதகம்?
மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவில் டிரம்ப் மாற்றம் கொண்டு வருவாரா? ஜோ பைடனை விடவும் டிரம்பை சாதகமானவராக செளதி அரேபியா பார்ப்பது ஏன்? டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது மத்திய கிழக்கில் யாருக்கு சாதகம்?
டிரம்ப் - மோதி நட்பு எவ்வளவு வலிமையானது? அதனால் இந்தியாவுக்கு பலன் கிடைக்குமா?
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்கும்? பரஸ்பரம் நண்பர்கள் என்று அழைக்கும் இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது நட்பிற்காகத் தங்கள் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்வார்களா?
தமிழ்நாடு அரசின் பன்றி வளர்ப்புக் கொள்கை அறிவிப்பு - களத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு தருமா?
தமிழ்நாட்டில் பன்றி வளர்ப்புக்கென தனிக் கொள்கையை வகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது மாநில அரசு. அது பன்றி வளர்ப்புப் பண்ணைகளின் நடைமுறை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ளதா? கால்நடைத் துறை அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்