1675
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1675 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1675 MDCLXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1706 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2428 |
அர்மீனிய நாட்காட்டி | 1124 ԹՎ ՌՃԻԴ |
சீன நாட்காட்டி | 4371-4372 |
எபிரேய நாட்காட்டி | 5434-5435 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1730-1731 1597-1598 4776-4777 |
இரானிய நாட்காட்டி | 1053-1054 |
இசுலாமிய நாட்காட்டி | 1085 – 1086 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 3 (延宝3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1925 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4008 |
1675 (MDCLXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 29 - ஆங்கிலக்-கல்வி பெற்ற அமெரிக்கப் பழங்குடிக் கிறித்தவர் யோன் சாசமன் என்பவர் இறந்ததை அடுத்து, நியூ இங்கிலாந்தின் ஆங்கில-அமெரிக்கக் குடியேற்றவாதிகளுக்கும், அல்கோன்கியன் பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டு காலம் நீடித்த போர் ஆரம்பமானது. இவரது கொலையாளிகள் சூன் 8 அன்று தூக்கிலிடப்பட்டனர்.
- நவம்பர் 2-12 - 13 குடியேற்றங்களின் ஆணையாளர்கள் நரகான்செட் பழங்குடியினருக்கு எதிராக பொது ஆயுதப் படை ஒன்றை அமைத்தனர்.
- நவம்பர் 11 - சீக்கியரின் 9வது குரு தேக் பகதூர் இந்துக்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்கு ஆதரவாக இருந்தமைக்காக முகலாய அரசினால் பொதுவில் தூக்கிலிடப்பட்டார். குரு கோவிந்த் சிங் பத்தாவது குருவாக நியமிக்கப்பட்டார்.
- ஆன்டன் வான் லீவன்ஹூக் மனித இழையங்களை அவதானிப்பதற்கு நுண்நோக்கியைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
பிறப்புகள்
[தொகு]- சூன் 1 - பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலிய தொல்லியலாளர் (இ. 1755)
- முதலாம் சரபோஜி, தஞ்சை மன்னர் (இ. 1728)
இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 15 - யொஹான்னெஸ் வெர்மீர், டச்சு ஓவியர் (பி. 1632)