பேராக் சுல்தான்
பேராக் சுல்தான் Sultan of Perak Sultan Perak Darul Ridzuan | |
---|---|
ஆட்சிக்காலம் | 29 மே 2014 – இன்று வரையில் |
முடிசூட்டுதல் | 6 மே 2015 |
முன்னையவர் | பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Azlan Shah of Perak |
பின்னையவர் | ராஜா ஜபார் |
பிறப்பு | 27 நவம்பர் 1956 |
மரபு | சியாக் பேராக் House of Siak-Perak |
தந்தை | பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Nazrin Muizzuddin Shah ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah |
தாய் | துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலி |
பேராக் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Perak; மலாய்: Sultan Perak; சீனம்: 霹雳州苏丹; ஜாவி: سلطان ڤيراق) என்பவர் பேராக் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். பேராக் சுல்தான்களின் வம்சாவளியைச் சார்ந்த பேராக் சுல்தானகம் என்பது மலாய் மாநிலங்களில் உள்ள பழமையான அரச பரம்பரைகளில் ஒன்றாகும்.[1][2]
1511-இல் போர்த்துகீசிய தாக்குதல்களால் மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சி அடைந்த போது, சுல்தான் மகமுட் சா எனும் மலாக்கா சுல்தான், ரியாவு தீவுகளில் இருந்த கம்பார் பகுதிக்கு பின்வாங்கி 1528-இல் காலமானார். அவருக்கு ராஜா அலி எனும் அலாவுதீன் ரியாட் ஷா II, ராஜா முசாபர் சா மற்றும் ராஜா அகமது எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.
மலாக்கா சுல்தானகம்
[தொகு]மூத்தவரான ராஜா அலி எனும் அலாவுதீன் ரியாட் ஷா II, ஜொகூர் சுல்தானகத்தை (பழைய ஜொகூர் சுல்தானகம்) நிறுவினார். இரண்டாவது மகன் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்ய அழைக்கப்பட்டார். இவர் பேராக் சுல்தானிய வம்சத்தின் முதல் சுல்தான் ஆனார்.
பழைய ஜொகூர் சுல்தானகத்தை ஆட்சி செய்து வந்த சுல்தான் மகமூத், தளபதி மெகாட் செரி ராமா என்பவரால் 1699-இல் படுகொலை செய்யப்பட்டார். அதன் மூலம், பேராக் மாநிலம் தவிர மற்ற மலாய் மாநிலங்களில் மலாக்கா சுல்தானகத்தின் வாரிசுகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது.[3]
தற்போதைய பேராக் சுல்தான்கள், மலாக்கா சுல்தானகம் மற்றும் சியாக் சுல்தானகத்தின் வம்சாவளியினர் ஆகும்.
பேராக் அரியணை வாரிசு முறைமை
[தொகு]மற்ற மலாய் சுல்தானகங்களுக்கு மாறாக, பேராக் ஆளும் வம்சம் சற்றே சிக்கலான வாரிசு முறையைப் பயன்படுத்துகிறது. தற்போதைய முறைமையில், ஓர் ஆளும் சுல்தான், சில உயர் இளவரசர் பட்டங்களுக்கு ஆண்களை (இளவரசர்கள்) நியமிக்கிறார். அந்த நியமனங்கள் அரியணைக்கான வாரிசு வரிசையில்; முன்னுரிமையின் தகுதியில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
25 பிப்ரவரி 1953-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வரிசைமுறை மற்றும் அதற்கான வாரிசு தகுதிகள் பின்வருமாறு:
Sultan Perak பேராக் சுல்தான் |
Duli Yang Maha Mulia Paduka Seri Sultan Perak Darul Ridzuan பேராக் சுல்தான் நசுரின் சா |
---|---|
Raja Muda Perak ராஜா மூடா பேராக் |
Duli Yang Teramat Mulia Raja Muda Perak Darul Ridzuan ராஜா ஜபார் |
Raja Di-Hilir ராஜா டி ஈலிர் பேராக் |
Duli Yang Amat Mulia Raja DiHilir Perak Darul Ridzuan ராஜா இசுகந்தர் சுல்கர்னாயின் |
Raja Kechil Besar ராஜா கெச்சில் பெசார் |
Yang Teramat Mulia Raja Kecil Besar Perak Darul Ridzuan ராஜா அசுலான் முசபர் சா |
Raja Kechil Sulung ராஜா கெச்சில் சூலோங் |
Yang Teramat Mulia Raja Kecil Sulong Perak Darul Ridzuan ராஜா அகமது நசீம் சா |
Raja Kechil Tengah ராஜா கெச்சில் தெங்கா |
Yang Teramat Mulia Raja Kecil Tengah Perak Darul Ridzuan ராஜா டத்தோ ஸ்ரீ இசுகந்தர் |
Raja Kechil Bongsu ராஜா கெச்சில் பொங்சு |
Yang Teramat Mulia Raja Kecil Bongsu Perak Darul Ridzuan காலி |
இளவரசர் பட்டங்களை வைத்திருப்பவர்கள் பொதுவாக உறுதிபடுத்தப்பட்ட திறமையின்மை அல்லது இயலாமையின் காரணங்களினால் அவர்களின் பதவிகள் நீக்கம் செய்யப்படலாம். ஏற்கனவே பட்டத் தகுதிகள் உள்ளவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டால், அவருக்கு அடுத்தபடியாக மூத்த பட்டத்தை வைத்திருப்பவர் அடுத்த தகுதிக்கு தகுதி உயர்த்தப்படுவார்.
ராஜா மூடா என்பது வெளிப்படையான வாரிசு ஆகும். மற்றும் ராஜா மூடாவின் மறைவுக்குப் பிறகு ராஜா ஈலிர் என்ற பட்டத்தை வைத்திருக்கும் இளவரசர் புதிய ராஜா மூடா ஆகிறார். இதற்குப் பின்னர் ராஜா கெச்சில் பெசார் எனும் தகுதி; ராஜா ஈலிர் தகுதியாக மாறுகிறது. இந்த வாரிசுகளால் காலியாகும் மற்ற பதவிகளுக்கு புதிய சுல்தான் தன் சொந்த வேட்பாளரை நியமிக்கலாம்.[சான்று தேவை]
மலாக்கா வம்சாவளி சுல்தான்கள்
[தொகு]எண் | பெயர் | காலம் |
---|---|---|
1 | பேராக் சுல்தான் முசபர் சா I (Muzaffar Shah I of Perak) | 1528–1549 |
2 | பேராக் சுல்தான் மன்சூர் சா I (Mansur Shah of Perak) | 1549–1577 |
3 | பேராக் சுல்தான் தஜுடின் சா (Ahmad Tajuddin Shah of Perak) | 1577–1584 |
4 | பேராக் சுல்தான் தாஜுல் அரிபின் சா I (Tajul Ariffin Shah of Perak) | 1584–1594 |
5 | பேராக் சுல்தான் அலாவுதின் சா (Alauddin Shah of Perak) | 1594–1603 |
6 | பேராக் சுல்தான் முக்காடாம் சா (Mukaddam Shah of Perak) | 1603–1619 |
7 | பேராக் சுல்தான் மன்சூர் சா II (Mansur Shah II of Perak) | 1619–1627 |
8 | பேராக் சுல்தான் மகமுட் சா I (Mahmud Shah I of Perak) | 1627–1630 |
9 | பேராக் சுல்தான் சலாவுதின் சா (Salehuddin of Perak) | 1630–1636 |
சியாக் வம்சாவளி சுல்தான்கள்
[தொகு]எண் | பெயர் | காலம் |
---|---|---|
10 | பேராக் சுல்தான் முசபர் சா II (Muzaffar Shah I of Perak) | 1636–1653 |
11 | பேராக் சுல்தான் மகமுத் இசுகந்தர் சா (Mahmud Iskandar Shah of Perak) | 1653–1720 |
12 | அலாவுதீன் முகயத் சா (Alauddin Mughayat Shah) | 1720–1728 |
13 | முசாபர் ரியாத் சா III (Muzaffar Riayat Shah III) | 1728–1752 |
14 | முகமது முகயத் சா (Muhammad Mughayat Shah) | 1744–1750 |
15 | இசுகந்தர் சுல்கர்னைன் (Iskandar Zulkarnain) | 1752–1765 |
16 | மகமூத் சா II (Mahmud Shah II) | 1765–1773 |
17 | அலாவுதீன் மன்சூர் சா (Alauddin Mansur Shah)) | 1773–1786 |
18 | அகமதின் சா (Ahmaddin Shah) | 1786–1806 |
19 | அப்துல் மாலிக் மன்சூர் சா (Abdul Malik Mansur Shah) | 1806–1825 |
20 | அப்துல்லா முவாசாம் சா (Abdullah Mu’azzam Shah) | 1825–1830 |
21 | சகாபுதீன் ரியாத் சா (Shahabuddin Riayat Shah) | 1830–1851 |
22 | அப்துல்லா முகமது சா I (Abdullah Muhammad Shah I) | 1851–1857 |
23 | ஜாபர் சபியுதீன் முவாசாம் சா (Ja’afar Safiuddin Mu’azzam Shah) | 1857–1865 |
24 | அலி அல்-முக்மல் இனாயத் சா (Ali Al-Mukammal Inayat Shah) | 1865–1871 |
25 | இசுமாயில் முஆபிதீன் ரியாத் சா (Ismail Mu’abidin Riayat Shah) | 1871–1874 |
26 | அப்துல்லா முகமது சா II (Abdullah Muhammad Shah II) | 1874–1876 |
27 | யூசுப் சரீபுதீன் முசாபர் சா (Yusuf Sharifuddin Muzaffar Shah) | 1886–1887 |
28 | இட்ரிசு முர்சிதுல் அசாம் சா வார்ப்புரு:Small( | 1887–1916 |
29 | அப்துல் சலீல் நசிருதீன் முதரம் சா (Abdul Jalil Nasiruddin Muhtaram Shah) | 1916–1918 |
30 | இசுகந்தர் சா Iskandar of Perak | 1918–1938 |
31 | அப்துல் அசீஸ் அல்-முதாசிம் பில்லா சா (Abdul Aziz al-Muʽtasim Billah Shah) | 1938–1948 |
32 | யூசுப் இசுதீன் சா (Yussuff Izzuddin Shah) | 1948–1963 |
33 | இட்ரீசு இசுகந்தர் அல் முதவாக்கில் சா (Idris Iskandar al-Mutawakkil Alallahi Shah) | 1963–1984 |
34 | பேராக் சுல்தான் அசுலான் சா (Azlan Shah of Perak) | 1984–2014 |
35 | பேராக் சுல்தான் நசுரின் சா (Nazrin Shah of Perak) | 2014 – தற்போது வரையில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sultan Nazrin Shah is the ruler of the state of Perak, Malaysia. He is a descendant of a dynasty dating back to 1528. Upon the demise of his father, His Royal Highness Sultan Azlan Muhibbuddin Shah, on 28 May 2014, the Dewan Negara proclaimed Raja Nazrin Shah as the 35th Sultan of Perak Sultan Nazrin Shah". Sultan Nazrin Shah. பார்க்கப்பட்ட நாள் 24 January 2024.
- ↑ "Sultan Nazrin Shah is an Honorary Fellow of Worcester College, Oxford, and of Magdalene College and St. Edmund's College, both Cambridge". Sultan Nazrin Shah. பார்க்கப்பட்ட நாள் 24 January 2024.
- ↑ Khoo, Kay Kim (2001). "Chapter 1: The Peninsular Malay Sultanates: Genesis and Salient Features". Malay Society, Transformation & Democratisation. Subang Jaya: Pelanduk Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-978-386-3.
நூல்கள்
[தொகு]- Zakiah Hanum (2004). Asal Usul Negeri-Negeri Malaysia. Times Editions-Marshall Cavendish. ISBN 9812326081.
- Tun Ahmad Sarji bin Abdul Hamid (2011). The Encyclopedia of Malaysia : Volume 16, The Rulers of Malaysia. Archipelago Press. ISBN 9789813018549.