iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://ta.wikipedia.org/wiki/பீனிக்ஸ்_(பறவை)
பீனிக்ஸ் (பறவை) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பீனிக்ஸ் (பறவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பனைச் சித்திரத்தில் பீனக்ஸ்
கற்பனைச் சித்திரத்தில் பீனக்ஸ்

பீனிக்ஸ் என்பது கதைகளில் வரும் ஒரு அழியாத பறவையாகும். இது சுழற்சி முறையில் மீளுருவாக்கம் செய்கிறது அல்லது மீண்டும் பிறக்கிறது. இது கிரேக்க புராணங்களின் ஒரு பகுதியாக இருந்தாலும், எகிப்து மற்றும் பாரசீக கலாச்சாரங்களில் இது ஒப்புமைகளைக் கொண்டுள்ளது. சூரியனுடன் தொடர்புடைய பீனிக்ஸ் பறவை அதன் முன்னோடியின் சாம்பலில் இருந்து எழும்புவதன் மூலம் புதிய வாழ்க்கையைப் பெறுகிறது. சில புராணக்கதைகள் அது தீப்பிழம்புகள் சூழ இறந்துவிடுவதாகக் கூறுகின்றன, மற்றவை அது இறந்து மீண்டும் பிறப்பதற்கு முன் வெறுமனே சிதைந்துவிடும் என கூறுகின்றன.[1]

பீனிக்ஸ் பறவையின் தோற்றம் பண்டைய எகிப்து அறிஞர் எரோடோட்டசு எழுதிய குறிப்புகள் என கூறப்படுகின்றது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் அறிஞர்கள் எகிப்திய நூல்கள் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளிலிருந்து பீனிக்ஸ் பறவையை பற்றிய குறிப்புகளை எடுத்திருக்கலாம் எனக்கூறுகின்றனர். காலப்போக்கில் பீனிக்ஸ் பறவையின் உருவம் உலகெங்கும் பரவியது. மூத்த பிளினி, போப் கிளெமென்ட் I, லாக்டான்டியஸ், ஓவிட் மற்றும் செவில்லியின் இசிடோர் ஆகியோர் பீனிக்ஸ் மையக்கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் பரப்புவதற்கும் பங்களித்தவர்களில் அடங்குவர். காலப்போக்கில், அதன் தோற்றத்திற்கு அப்பால் விரிவடைந்து, பீனிக்ஸ் பறவை புதுப்பித்தல், சூரியன், நேரம், பேரரசு, பரகாயப் பிரவேசம், அர்ப்பணிப்பு, உயிர்த்தெழுதல், சொர்க்க வாழ்க்கை, விதிவிலக்கான மனிதன் மற்றும் வாழ்வின் அம்சங்கள் போன்றவற்றுடன் தொடர்பு படுத்தப்பட்டது.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

நவீன ஆங்கில வார்த்தையான பீனிக்ஸ் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் நுழைந்தது, பின்னர் பிரெஞ்சு மொழியால் வலுப்படுத்தப்பட்டது. லத்தீன் பீனிக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து பழைய ஆங்கிலத்தில் பெனிக்ஸ் என்ற வார்த்தை உருவானது. காலப்போக்கில், இந்த வார்த்தை ஆங்கில மொழியில் சிறப்புப் பயன்பாட்டை உருவாக்கியது.[3] லத்தீன் வார்த்தையான பீனிக்ஸ் கிரேக்க வார்த்தையான போனிக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து வந்தது.[4] கிரேக்க வார்த்தை "பனை மரம்" என்று பொருள்படும். அந்த வார்த்தை மேடர் என்ற ஒரு வகை சிவப்பு நிற சாயத்தை குறிக்கின்ற ஓர் மேற்கத்திய செமிட்டிக் வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பீனீசியன் என்ற வார்த்தை அதே வேரில் இருந்து வருகிறது, அதாவது "சிவப்பு சாயங்களுடன் வேலை செய்பவர்கள்" என்று பொருள். எனவே பீனிக்ஸ் என்றால் "பீனிசியன் பறவை" அல்லது "சிவப்பு பறவை" என்று பொருள் கொள்ளலாம்.[5]

ஆரம்பகால நூல்கள்

[தொகு]

மைசீனியன் கிரேக்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பீனிக்ஸ் பற்றிய தெளிவான குறிப்பு, கிமு 8 ஆம் நூற்றாண்டின் கிரேக்கக் கவிஞர் எசியோடு என்பவரால் கூறப்பட்ட சிரோனின் கட்டளைகள் நூலில் உள்ளது.[6] பீனிக்ஸ் பறவையின் நீண்ட காலம் வாழும் என்று விவரிக்கிறது. பீனிக்ஸ் பற்றிய தற்போதைய உருவம் பண்டைய எகிப்து நாட்டில் உருவானது. கிமு 5 ஆம் நூற்றாண்டில் எரோடோட்டசு பீனிக்ஸ் பற்றி விவரிக்கிறார்.[7] 19 ஆம் நூற்றாண்டில், ஹீலியோபோலிஸில் எகிப்தியர்கள் கிரேக்க பீனிக்ஸ் பறவையைப் போன்ற ஒரு சூரியப் பறவையான பென்னுவை வணங்கினர் என்ற கண்டுபிடிப்பின் மூலம் கல்விசார் சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.[8]

சித்தரிப்புகள்

[தொகு]

பீனிக்ஸ் சில சமயங்களில் பண்டைய மற்றும் இடைக்கால இலக்கியங்கள் மற்றும் இடைக்கால கலைகளில் ஒரு ஒளிவட்டத்துடன் சித்தரிக்கப்படுகிறது, இது பறவையின் சூரியனுடனான தொடர்பை வலியுறுத்துகிறது.[9] பதிவு செய்யப்பட்ட பீனிக்ஸ் பறவைகளின் பழமையான படங்களில், சூரியனின் உருவம் போன்ற ஏழு கதிர்களைக் கொண்டிருக்கின்றன.[10] ப்ளினி பறவையின் தலையில் இறகுகளின் முகடு இருப்பதாகவும் விவரிக்கிறார்.[11][9] நாடக கலைஞர் எசேக்கியேல் அதை சேவலுடன் ஒப்பிட்டார்.[12]

காலப்போக்கில் பீனிக்ஸ் குறிப்பிட்ட நிறங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. பீனிக்ஸ் பொதுவாக வண்ணமயமாகவும் துடிப்பாகவும் இருப்பதாக நம்பப்பட்டாலும், ஆதாரங்கள் அதன் நிறம் குறித்து தெளிவான ஒருமித்த கருத்தை வழங்கவில்லை. அதன் நிறம் மற்ற எல்லாப் பறவைகளிலிருந்தும் தனித்து நிற்கச் செய்ததாக டாசிடஸ் கூறுகிறார்.[13] அந்தப் பறவை மயில் போன்ற நிறத்தைக் கொண்டிருந்தது என்றும், பீனிக்ஸ் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக சிலர் கூறினர்.[14] பீனிக்ஸ் பறவைக்கு சிவப்பு கால்கள் மற்றும் கண்கள் இருப்பதாக எசேக்கியேல் கூறினர்.[15]

ஹெரோடோடஸ், பிளினி, சோலினஸ் மற்றும் பிலோஸ்ட்ராடஸ் பீனிக்ஸ் பறவை கழுகை போன்றது என விவரிக்கின்றனர்.[16] ஆனால் லாக்டான்டியஸ் மற்றும் எசேக்கியேல் இருவரும் பீனிக்ஸ் பெரியது என்று கூறுகின்றனர், லாக்டான்டியஸ் அது தீக்கோழியை விட பெரியது என்று கூறுகின்றார்.[17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Van der Broek 1972, ப. 146.
  2. Van der Broek 1972, ப. 9.
  3. "Phoenix". Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 6 November 2020.
  4. Barnhart, Robert K (1995). The Barnhart Concise Dictionary of Etymology. HarperCollins. p. 564. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-270084-7.
  5. Van der Broek 1972, ப. 62–66.
  6. Garry, Jane; El-Shamy, Hasan (2005). Archetypes and Motifs in Folklore and Literature. ME Sharpe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-76561260-1.
  7. G. Rawlinson (1858). Book II Herodotus, The Histories. {{cite book}}: Check |url= value (help)
  8. Van der Broek 1972, ப. 14–25.
  9. 9.0 9.1 Van der Broek 1972, ப. 233.
  10. Van der Broek 1972, ப. 246–247.
  11. Ancient Magic and the Supernatural in the Modern Visual and Performing Arts, edited by Filippo Carlà-Uhink, Irene Berti, 2016, p. 172
  12. Van der Broek 1972, ப. 257.
  13. Van der Broek 1972, ப. 253.
  14. Van der Broek 1972, ப. 259.
  15. Van der Broek 1972, ப. 257–258.
  16. Van der Broek 1972, ப. 251.
  17. Van der Broek 1972, ப. 252.

உசாத்துணைகள்

[தொகு]
  • Van der Broek, R (1972). The Myth of the Phoenix. Seeger, I trans. EJ Brill.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phoenix
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனிக்ஸ்_(பறவை)&oldid=3937483" இலிருந்து மீள்விக்கப்பட்டது