பாரினின் பயன்
பாரின் இன பயன் (மொங்கோலியம்: Баян; 1236 – சனவரி 11, 1295) அல்லது போயன் (சீனம்: 伯顔; பின்யின்: Bóyán) என்பவர் ஒரு மங்கோலியத் தளபதி ஆவார். மார்க்கோபோலோ இவரை "நூறு கண் பயன்" என்று அறிந்திருந்தார். சீன மொழிச் சொல்லில் (சீனம்: 百眼; பின்யின்: Bǎiyǎn) ஏற்பட்ட குழப்பத்தால் அவர் இவ்வாறு அறிந்திருக்கலாம். சீனாவின் சாங் அரசமரபிற்கு (960-1279) எதிராக குப்லாய் கானின் இராணுவத்தை இவர் வழிநடத்தினார். சாங் அரசமரபு வீழ்ந்து, தெற்கு சீனாவை யுவான் அரசமரபு கைப்பற்ற இவரும் ஒரு காரணம் ஆவார்.
"பயன்" என்ற மொங்கோலிய மொழிச் சொல்லுக்கு "பணக்கார" என்று பொருள்.
பின்புலம்
[தொகு]இவர் நயகா என்ற செங்கிசு கானின் ஒரு தளபதியின் உறவினராகப் பிறந்தார். மங்கோலியர்களின் பாரின் பழங்குடியினத்தில் பிறந்தார்.[1] இவரது தாத்தாவும், நயகாவும் சகோதரர்கள் ஆவர். அவர்களது தந்தையின் பெயர் சிர்குகேது எபுகென். இந்த மூவரும் மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2] எனினும் குறைந்தது ஒரு மதிப்பிற்குரிய அறிஞர் பயன் துருக்கிய மக்கள் குழுவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களது குடும்பமானது பெரிய கான்களுக்கு நீண்டகாலமாகச் சேவை செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ Cleaves, p. 185, 198 ff
- ↑ In §149 and §220. They and Alagh's brother Nayagha captured their lord Tarkhutai of the Taichigud, and planned to bring their prisoner to செங்கிஸ் கான். But then they decided that harming their legitimate lord might cause offence; and they set him free. Genghis confirms their decision, and rewards Nayagha. Later, Nayagha becomes leader of a தியுமன். Cleaves, p. 205n3, 205n5; Erich Haenisch (translator), Die Geheime Geschichte der Mongolen, Leipzig 1948, pp. 50, 103
- ↑ Rossabi, 87