தூரயா
நிறுவுகை | 1997 |
---|---|
தலைமையகம் | ஐக்கிய அரபு அமீரகம் |
முதன்மை நபர்கள் | CEO Samer Halawi |
தொழில்துறை | Satellite phone network operations |
இணையத்தளம் | www.thuraya.com |
தூரயா (Thuraya) என்பது பூமிக்குச் சார்பான (geosynchronous) இரண்டு செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் செய்மதித் தொலைபேசியாகும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளை முதன்மையாகக் கருத்திற் கொண்டு நிலையாக இயங்கும் பூமி சார் தொலைத் தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இன்னும் ஒரு செயற்கைக்கோள் பின்னணியில் இயங்குகின்றது. மேலும் ஒரு செயற்கைக்கோள் 2007 நவம்பர் 21 ஆம் தேதி ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2007 ஆம் ஆண்டில் இறுதியில் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்தும் இந்த வலையமைப்பை அணுகுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
மார்ச் 2006 இன்படி 250,000 வாடிக்கையாளர்களை தூரயா கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 360,000 தொலைத்தொடர்பாடல் கருவிகளை விற்றுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஏப்ரல் 15, 1997 இல் தொடங்கப்பட்டது. இது வேறு சேவை வழங்கும் உரிமைகளை வேறு நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது.
சேவைகள்
[தொகு]தூரயா தற்பொழுது கீழ்வரும் செய்மதியூடான சேவைகளை வழங்கி வருகின்றது:
- கையடக்கக் கருவிகள் மற்றும் நிலையான செய்மதித் தொலைபேசிகளூடான ஒலியழைப்புக்கள்.
- குறுஞ்செய்திகள்
- நொடிக்கு 9.6 கிலோ பைட்ஸ் வேகமான தொலைநகல் வசதி.
- SO மற்றும் SG கையடக்கத் தொலைபேசிகளில் நொடிக்கு 60 கிலோபைட்ஸ் வேகத்தில் பதிவிறக்கமும் நொடிக்கு 15 கிலோபைட்ஸ் வேகத்தில் மேலேற்றமும் செய்யும் வசதி.
- தூரயா DSL ஊடாக 144 கிலோ பைட்ஸ்/நொடி மடிக்கணினிகள் அளவான கருவியூடாக வேகமான இணைய இணைப்பு.
- பூமியில் இடத்தைக் காட்டும் கருவி (GPS) வசதிகளையும் கொண்டுள்ளது. இது மாத்திரம் அன்றி பூமியில் நீங்கள் இருக்கும் இடத்தை நேரடியாக குறுஞ்செய்திகளாக அனுப்பவும் முடியும். இது பெரும்பாலும் பாலைவனப் பகுதி்களில் அல்லது அதிக ஆள் நடமாட்டமில்லா காடுகளில் செல்லும்பொழுதும், மலைகளில் ஏறும் பொழுதும் வழி தவறவிட்டால் பெரிதும் உதவுக்கூடியது.
தொழில்நுட்பத் தகவல்கள்
[தொகு]தூரயாவின் பன்னாட்டு அழைப்பு எண் +88216 ஆகும். இது வட்டார செய்மதித் தொலைத் தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதே அன்றி பன்னாட்டு செய்மதித் தொலைபேசி வலையமைப்பு என வகைப்படுத்தப்படவில்லை. இது ஏனைய நிறுவனங்கள் எடுத்துக்காட்டாக இரிடியம் போன்ற நிறுவனங்கள் தமது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் +881 என்றவாறு பயன்படுத்துவதைப் போன்றல்லாமல் 5 இலக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்மதிகள்
[தொகு]போயிங் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இரண்டு தொடர்பாடற் செய்மதிகளைத் தூரயா நிறுவனம் பயன்படுத்துகின்றது.
தூரயா 1
[தொகு]இம் முதற் செயற்கைக் கோள் சூரிய கலத்தில் இருந்து மின்னுருவாக்கத்தில் குறைபாடுகள் உள்ளதால் சரியாக இயங்கவில்லை. இச்செயற்கைக் கோள் கொரியாவின் வான்பரப்பின்மேல் சோதனைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது 21 அக்டோபர் அன்று சீலான்ச் ஊடாக செனிட் 3எஸ்எல் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.[1] அப்போது அதன் நிறை 5250 கிலோகிராம் ஆகும்.[2] ஏவி விடும் போது அதன் நிறை 5250 கிலோகிராம் ஆகும்.[3]
தூரயா 2
[தொகு]தூரயா 2 சீ-லான்ச்சினால் 10 ஜூன் 2003 அன்று ஏவப்பட்டது.[4] இது பூமியுடன் பூமிக்குச் சார்பாக ஓரே இடத்தில் இருக்கும் வகையில் 44 பாகை நெட்டாங்கிலும் 6.3 பாகை ஏற்றத்திலும் இருக்கக்கூடியதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இச்செய்மதி 13, 750 ஒலியழைப்புக்களை ஒரே நேரத்தில் கையாளவல்லது.
தூரயா 3
[தொகு]தூரயா 3 செய்மதி வசந்த காலத்தில் ஏவ முடிவெடுக்கப்பட்டபோதிலும் ஜனவரி 2007 இல் வேறொரு ராக்கெட்டைச் செலுத்துவதில் ஏற்பட்ட பிழையினால் பல முறை பின்போடப்பட்டு தைப்பொங்கற் தினமான 15 ஜனவரி 2008 அன்று ஏவப்பட்டது. இல்இது இன்னமும் ஏவப்படவில்லை. இச் செய்மதி மூலம் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இதன் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியவாறு விரிவாக்கும் எண்ணக்கருவுடனேயே இச்செய்மதி ஏவப்பட இருக்கின்றது. இது ஏவப்பட்டு 2 மாதத்தின் பின்னர் இது பணியாற்றத் தொடங்கும்.[5]
பெரும்பாலும் எல்லா தூரயா தொலைபேசிகளும் (SO-2510 தவிர) செய்மதியூடாகவோ அல்லது உள்ளூர் நகர்பேசி சேவைவழங்குனர் ஊடாகவோ இரண்டு வகையாகவும் வேலைசெய்யக் கூடியது. இதற்காகத் தூரயா 200க்கும் மேற்பட்ட நகர்பேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் தூராய தொலைபேசிகளை டயலாக் ஊடாக ஓரளவு குறைவான கட்டணத்தில் அழைப்புக்களை ஏற்படுத்த #உடன் இலக்கத்தை டயல் செய்யலாம் [6].
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "தூரயா1". தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம். Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2007-10-21. (ஆங்கில மொழியில்)
- ↑ "நகர்பேசித் தொலைத் தொடர்பிற்கான ஓர் முழுமையான செயற்கைக் கோள் தூரயா 1". Boeing. (ஆங்கில மொழியில்)
- ↑ "தூரயா-1 பூரண நகர்பேசித் தொலைத் தொடர்பாடல்". போயிங்.
- ↑ "தூரயா 2". NSSDC. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2007-10-21.
- ↑ "ஏவப்பட்டு இரண்டு மாதங்களில் பணியை ஆரம்பிக்கும்". Sea Launch. (ஆங்கில மொழியில்)
- ↑ # அழுத்தி மலிவான இணைப்புக்களை ஏற்படுத்தல் பரணிடப்பட்டது 2007-02-17 at the வந்தவழி இயந்திரம் டயலாக் நகர்பேசி அணுகப்பட்டது ஜனவரி 30, 2007 (ஆங்கில மொழியில்)
வெளியிணைப்புக்கள்
[தொகு]- தூராயாவிற்குக் குறுஞ்செய்திகள் அனுப்ப பரணிடப்பட்டது 2006-11-30 at the வந்தவழி இயந்திரம்
- தூரயாவில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்ப பரணிடப்பட்டது 2006-11-21 at the வந்தவழி இயந்திரம்