iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://ta.wikipedia.org/wiki/காட்டுப்பூனை
காட்டுப்பூனை - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டுப்பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுப்பூனை (வெருகு)[1]
காட்டுப்பூனை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Felis
இனம்:
F. chaus
இருசொற் பெயரீடு
Felis chaus
Johann Christian Daniel von Schreber, 1777
காட்டுப்பூனைகளின் பரவல்

காட்டுப்பூனை ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ள பூனை. இது ஆசியாவில் சீனாவில் இருந்து, தெற்காசியா, நடு ஆசியா, நைல் பகுதி வரை பரவியுள்ளது. மேலும் இது இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. காட்டுப் பூனையை வெருகு என்று தமிழ் அகராதிகள் குறிப்பிடுகின்றன.[2] வெருகு பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்களில் விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. [3]

இயல்பு

[தொகு]

வீட்டுப்பூனைகளை விடச் சற்று பெரிதாக இருக்கும் இப்பூனைகள் 55 முதல் 94 செ.மீ நீளம் வரையும் 36 செ.மீ உயரம் வரையும் வளரும். மூன்றில் இருந்து 12 கிலோ எடை வரை இருக்கும். கடுவன் பூனைகள் பெட்டைகளை விடச் சற்று பெரியவை. அடர்ந்த காடுகளை விரும்பாத இப்பூனை சவான்னா புல்வெளி, வெளிப்பாங்கான காடுகள் முதலிய இடங்களில் வாழும். காட்டுப்பூனைகள் நன்றாக மரம் ஏற வல்லவை.

உணவு

[தொகு]

காட்டுப்பூனை கொறிணிகள், அணில், முயல், தவளை, பறவைகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். ஊர்ப்புறங்களில் இவை வீட்டில் வளர்க்கப்படும் கோழி, வாத்து ஆகியவற்றையும் வேட்டையாடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. https://ta.m.wiktionary.org/wiki/வெருகு
  3. குறுந்தொகை பாடல்கள் 107, 139


"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்பூனை&oldid=4104767" இலிருந்து மீள்விக்கப்பட்டது