ஆவலம்பட்டி, அரூர்
Appearance
ஆவலம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 305 |
ஆவலம்பட்டி (Avlampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது தாசிரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 143 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 535 ஆகும். இதில் 257 ஆண்களும் 278 பெண்களும் அடங்குவர்.[2]