ஆயிரமாண்டு
Appearance
ஆயிரமாண்டு அல்லது சாவிரம் (Millennium) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும். நாட்காட்டி அமைப்பொன்றினை அடியொட்டி இவை குறிப்பிடப்பட்டாலும் சில சமய நூல்களில் இவை துல்லியமாக, ஆண்டு எண்ணிக்கை ஆயிரமாக, இருக்காதிருக்கலாம்.
குழப்பங்கள்
[தொகு]தவிர துவக்க ஆண்டு சூன்யத்தில் துவங்குகிறதா அல்லது ஒன்றில் துவங்குகிறதா எனவும் குழப்பங்கள் நேருகின்றன. அண்மையில் 2000 ஆண்டு ஆயிரமாண்டாகக் கொண்டாடப்பட்ட வேளையில் ஆண்டு முதல்நாள் மூன்றாம் ஆயிரமாண்டு துவங்குகிறதா அல்லது இறுதியிலா என குழப்பம் வந்தது.
முடிவு
[தொகு]கிரிகோரியன் நாட்காட்டி அமைப்பில் 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரமாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரமாண்டு என்று முடிவு காணப்பட்டது.
வெளியிணைப்புகள்
[தொகு]- ஆயிரமாண்டு தவறு (ஆங்கிலத்தில்) பரணிடப்பட்டது 2009-05-22 at the வந்தவழி இயந்திரம்